Maaveeran
இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து கடந்த ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்த நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் சரிகா, மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு, குக் வித் கோமாளி பிரபலமான மோனிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும்... மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்ற நிலையில், வசூலில் கெத்து காட்டியது. நான்கு நாட்களில் சுமார் 50 கோடி வசூலித்த இந்த திரைப்படம், தற்போது வரை சில திரையரங்குகளில் 'மாவீரன்' ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நாளைய தினம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.