Annaatthe Box Office Collection 'அண்ணாத்த' படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்து வெளியான தகவல்..!

First Published Nov 5, 2021, 11:56 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) 'அண்ணாத்த' திரைப்படம் முதல் நாள் வசூல் (Annaatthe First day box office Collection) குறித்த தகவல்கள் தற்போது வெளியாக துவங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள கலெக்ஷன் குறித்த விவரங்கள் இதோ....

'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு (நவம்பர் 4ஆம் தேதி) நேற்று உலகம் முழுவதும் திரைக்குவந்தது. யங் லுக்கில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ஜோடி போட்டு, கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் தலைவர் காளையனாக கலக்கி இருக்கும் படத்தை பார்க்க அவரது தீவிர ரசிகர்கள் இரவு ஒரு மணி முதலே திரையரங்குகளில் குவிந்து தலைவரின் படத்தை வரவேற்றனர்.

'அண்ணாத்த' திரைப்படம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் சுமார் 1200 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளதால், அதிக அளவில் வெளிநாடுகளில் வெளியிடப்படும் திரைப்படம் என்கிற பெருமையும் 'அண்ணாத்த' படத்திற்கு கிடைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியிடப்பட்ட முதல் பெரிய பட்ஜெட் படம் இதுவாகும். எனவே முதல் நாள் வசூல் முழு விவரம் வெளியானால் மிக அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி 'அண்ணாத்த' படம் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 53 இடங்களில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் முதல் நாளில் மட்டும் 63 லட்ச ரூபாய் வசூலித்ததாக வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது பதிவு இதோ...

அதே போல்  திண்டுக்கல் மற்றும் கேரளா பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ள நிலையில், திண்டுக்கல்லில் 19 .95 லட்சம் ரூபாய் அண்ணாத்த படம் வசூல் செய்திருப்பதாகவும், கேரள மாநிலத்தில், 3.18 லட்சம் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சென்னை மற்றும் தமிழகத்தில் அண்ணாத்த திரைப்படம் முதல் நாள் வசூல் குறித்து அதிகார பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்றாலும், சுமார் 20 கோடிக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின 168வது படமாக உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. கிராமப்புற பொழுதுபோக்கு அம்சங்கள், மற்றும் தங்கை சென்டிமென்டை மையமாக வைத்து இயக்குனர் சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!