Annaatthe: களைகட்டும் 'தலைவர்' தீபாவளி! முதல் நாள் முதல் ஷோவை மேளதாளத்தோடு வரவேற்ற ரசிகர்கள்..!

Published : Nov 04, 2021, 07:38 AM ISTUpdated : Nov 04, 2021, 09:26 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Super Star Rajinikanth) ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த 'அண்ணாத்த' (Annaatthe) திரைப்படம் இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்தோடு முதல் நாள் முதல் ஷோவை கொண்டாடி உள்ளனர் (Fans Celebration). இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...

PREV
19
Annaatthe:  களைகட்டும் 'தலைவர்' தீபாவளி! முதல் நாள் முதல் ஷோவை மேளதாளத்தோடு வரவேற்ற ரசிகர்கள்..!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் 'அண்ணாத்த'. இந்த தீபாவளியை மேலும் சிறப்பாக்கும் விதமாக இன்றைய தினம் கோலாகலமாக படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

29

தலைவர் படம் என்றாலே முதல் நாள் முதல் ஷோ ரொம்ப ஸ்பெஷல். எனவே இதனை பல பிரபலங்களும் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டுகழித்துள்ளனர்.

39

தலைவரின் படத்தை இரவு ஒரு மணிக்கு கூட, ரசிகர்கள் ஆட்டம் - பாட்டம், பட்டாசு வெடித்து மேளதாளத்தோடு வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

49

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அண்ணாத்த' படத்தில் 'காளையன்' என்னும் கதாபாத்திரத்தில் கிராமத்து ப்ரசிடெண்ட்டாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் யங் லுக்கில் தன்னுடைய ஸ்டைலீஷிலும் தெறிக்க விட்டுள்ளார்.

59

இவருக்கு ஜோடியாக இந்த படத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். தங்கையாக கீர்த்தி சுரேஷும், முறை பெண்களாக குஷ்பூ மற்றும் மீனா ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

69

எனவே  பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள தலைவரின் 'அண்ணாத்த' படத்தை வேற லெவலுக்கு ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.

79

தமிழகம் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலும் தலைவரின் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் அதிக திரையரங்கில் வெளியாகும் திரைப்படம் என்கிற பெருமையையும் அண்ணாத்த திரைப்படம் பெற்றுள்ளது.

89

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் போன்றவற்றிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், திரைப்படத்திற்கும் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

99

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் 'அண்ணாத்த' படத்தை சட்ட விரோதமாக எந்த சமூக வலைத்தளங்களிலும் வெளியிட கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories