Annaatthe: ரொம்ப ஓவர் முடியல... தலைவரின் படத்தை பார்த்து ஏமார்ந்த ரசிகர்களின் ஆதங்கம்..!

Published : Nov 05, 2021, 10:49 AM ISTUpdated : Nov 05, 2021, 10:54 AM IST

தீபாவளி திருநாளை முன்னிட்டு நேற்று வெளியான 'அண்ணாத்த' (Annaatthe Movie) படம் குடும்பத்தோடு படம் பார்க்க நினைப்பவர்களுக்கு குட் சாய்ஸ் என்றாலும், தலைவரின் மாஸை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாகவே அமைத்துள்ளது. இதன் காரணமாகவே இந்த படத்திற்கு பலர் தங்களது நெகடிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.  

PREV
15
Annaatthe: ரொம்ப ஓவர் முடியல... தலைவரின் படத்தை பார்த்து ஏமார்ந்த ரசிகர்களின் ஆதங்கம்..!

கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்துள்ள 'அண்ணாத்த' படம் தீபாவளி தினத்தில் நேற்று வெளியானது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், டிரெய்லர் என ஒவ்வொன்றும் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அலாதியாகவே இருந்தது.

 

25

'அண்ணாத்த' படத்தை வரவேற்க இரவு முதலே தயாரான ரசிகர்கள், வீட்டில் தீபாவளி கொண்டாடும் முன்னர், திரையரங்கில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, ஆட்டம், பாட்டத்தோடு தலைவர் தீபாவளியை கொண்டாடினர்.

 

35

மேலும் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுடன் நேற்று 'அண்ணாத்த' படத்தை பார்த்து ரசித்தது, எந்த அளவிற்கு ரசிகர்களும், பிரபலங்களும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் என்பதை புரிய வைத்தது.

 

45

அதே நேரம் தலைவர் நடித்துள்ள 'அண்ணாத்த' படம், சில எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், தலைவர் படம் என்றாலே அவரது மாஸ் நடிப்பை எதிர்பார்த்த ரசிகர்ளுக்கு இது ஏமாற்றம் என்றே கூறலாம்.

 

55

தங்கச்சி செண்டிமெண்ட் ரொம்ப ஓவராக இருப்பதும் தலைவரின் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு காரணம். எதிர்பார்த்து சென்றது மாஸ் படத்தில் துளியும் இல்லாததால் 'விஸ்வாசம்' ஹிட்டுக்கு பிறகு, சிவா ரசிகர்களை ஏமாற்றி விட்டதாகவும் ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

 

click me!

Recommended Stories