தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது லைகா. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் அண்மையில் ரிலீசான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் ரிலீசான இரண்டே வாரத்தில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதேபோல் லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்த ஆண்டு ரிலீசான டான் படமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதுதவிர ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர், துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் என இந்த ஆண்டு அந்நிறுவனம் வெளியீடு செய்த திரைப்படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இதனால் செம்ம ஹாப்பியாக உள்ளாராம் சுபாஸ்கரன்.
இதையும் படியுங்கள்... முதல் வாரத்திலேயே வைல்டு கார்டு எண்ட்ரி... சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர் யார் தெரியுமா?
பொன்னியின் செல்வன் படம் வெற்றிபெற்றதை அடுத்து, ரஜினியை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது லைகா நிறுவனம். அதில் ஒரு படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் ரஜினியின் 171-வது படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.