சூப்பர் ஸ்டாரை கௌரவிக்கும் கர்நாடக அரசு...ராஜ்யோத்சவா விருது அறிவிப்பு

First Published | Oct 29, 2022, 5:21 PM IST

நவம்பர் ஒன்றாம் தேதி வழங்கப்பட உள்ள இந்த விருதுக்காக மறைந்த பிரபல நடிகர் புனித் ராஜ்குமார், ரஜினிகாந்த், என்டிஆர் உள்ளிட்டோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மிளிர்பவர் ரஜினிகாந்த். இறுதியாக இவர் நடிப்பில் அண்ணாத்த படம் வெளியாகி இருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக அமைந்திருந்தது. இதில் கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும், நயன்தாராவும் நாயகியாகவும் நடிக்க 90களில் சூப்பர் நாயகிகளான மீனா மற்றும் குஷ்பூ  காமியோ ரோலில் தோன்றியிருந்தனர்.

annaththa movie image

தனது தங்கைக்காக மிகப்பெரிய கேங்ஸ்டார்களுடன் நாயகன் போராடும் இந்த கதைக்களம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது. டி இமான் இசையமைப்பில் உருவான இந்த படம் 240 கோடிகளுக்கு மேல் வசூலை கொடுத்திருந்தது. அண்ணாத்த படம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் தேதி வெளியாகி இருந்தது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்திருந்தது.

Tap to resize

Image: Official film poster

இதை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடித்த பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோரும் ஒப்பந்தமாகியுள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கும் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை ஆரவாரத்தில் ஆழ்த்தியது. இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனத்துடன் இரண்டு படங்களில் நடிக்க நேற்று ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கர்நாடகா அரசின் உயரிய விருதான ராஜ்யோத்சவா விருதை ரஜினிகாந்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் கர்நாடக மாநிலம் உருவான நாள் அன்று ராஜ்யோத்சவா என்னும் விருது வழங்கப்படுகிறது. அதன்படி நவம்பர் ஒன்றாம் தேதி வழங்கப்பட உள்ள இந்த விருதுக்காக மறைந்த பிரபல நடிகர் புனித் ராஜ்குமார், ரஜினிகாந்த், என்டிஆர் உள்ளிட்டோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

gg Gandhada Gudi trailer Puneeth Rajkumar Amoghavarsha Ashwini narendra modi

கடந்த ஆண்டு மறைந்த பிரபல நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கப்படுவது அவரின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. புனித் ராஜ்குமார் சார்பாக அவரது மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமார் விருதினை பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு புனித் ராஜ்குமாரின் கடைசி ஆவணப்படமான கந்தாட குடி அக்டோபர் 28ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Videos

click me!