Actor Rajinikanths Vettaiyan collection report out
'ஜெயிலர் ' படத்தின் மெகா ஹிட் வெற்றிக்குப் பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி... அதாவது நேற்று வெளியான திரைப்படம் 'வேட்டையன்'. ரஜினிகாந்தின் 170 ஆவது திரைப்படமாக உருவான இந்த படத்தை, நடிகர் சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கி தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்தது. அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்த பாடலாக மாறியது.
Vettaiyan Movie release and review
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில், ரஜினிகாந்த் உடன் அவருடைய நண்பர் பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மலையாள நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ரானா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், உள்ளிட்ட பலர் நடித்தனர். அதேபோல் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார்.
சுச்சுவேஷன் தெரியாமல்.. சோக பாட்டை சிரித்து கொண்டே பாடிய SPB! எந்த பாடல் தெரியுமா?
Vettaiyan First Day Collection
ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக அதிரடி காட்டியுள்ள இந்த திரைப்படம், நேற்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் வெளியானது. அதேபோல் வெளிநாட்டிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கு இருந்த வரவேற்பு காரணமாக, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் 'வேட்டையன்' திரைப்படம் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அரசு அனுமதி கொடுத்த 9 மணிக்கு தான் முதல் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
Vettaiyan Day 1 India Level Collection
இந்நிலையில் 'வேட்டையன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படம் இந்தியாவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி அனைத்து இந்திய மொழிகளிலும் 'வேட்டையன்' திரைப்படம் சுமார் 30 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தோராயமாக 26.15 கோடி வசூலித்துள்ளதாம். இதை தவிர தெலுங்கில் 3.2 கோடியும், ஹிந்தியில் 0.6 கோடியும், கர்நாடகாவில் 0.05 கோடியையும் வசூலித்துள்ளது. 'வேட்டையன்' படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதாலும், தொடர் விடுமுறை காரணமாகவும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்க கூடும் என தெரிகிறது.
டாப் 10 TRP-யில் விஜய் டிவி தொடர்களை பந்தாடிய சன் டிவி! புதிய சீரியலால் சறுக்கிய 'சிங்கப்பெண்'!
Vettaiyan Not Beat Jailer Collection
ஆனால் ஜெயிலர் படத்தை விட மிகவும் குறைவான வசூலையே முதல் நாளில் இந்த படம் ஈட்டி உள்ளது. ஜெயிலருடன் திரைப்படம் முதல் நாளில் மட்டும், இந்திய அளவில் சுமார் 48 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.