ரோகிணி தியேட்டரில் 'ஜெயிலர்' கேக் கட் பண்ணி FDFS காட்சியை ரசிகர்களுடன் கண்டுகளித்த ரஜினி குடும்பம்! போட்டோஸ்.!

Published : Aug 10, 2023, 01:49 PM ISTUpdated : Aug 10, 2023, 01:55 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ள நிலையில், இன்று வெளியான 'ஜெயிலர்' படத்தை, ரஜினிகாந்தின் குடும்பத்தினர் ரோகிணி திரையரங்கில் கேக் வெட்டி ஆரவாரத்தோடு வரவேற்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
14
ரோகிணி தியேட்டரில் 'ஜெயிலர்' கேக் கட் பண்ணி FDFS காட்சியை ரசிகர்களுடன் கண்டுகளித்த ரஜினி குடும்பம்! போட்டோஸ்.!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 ஆவது படமாக உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று நாடு முழுவதும் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் ஃப்ரீ புக்கிங் மூலமாகவே இந்த படம் சுமார் 6 முதல் 7 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியான நிலையில்... முதல் நாள் வசூலில் தலைவரின் 'ஜெயிலர்' முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என கூறி வருகின்றனர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்.

24

மேலும் இன்று காலை முதலே 'ஜெயிலர்' படத்தை, ரஜினிகாந்தின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும்,மேள தாளத்துடன்... ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்று வரும் நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் FDFS காட்சி தமிழகத்தில் காலை 9 மணிக்கு துவங்கியது. அதற்கு முன்னதாகவே ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் 'ஜெயிலர்' திரைப்படம் திரையிடப்பட்டதால்  தமிழகத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் பலர் பிற மாநிலங்களுக்கு சென்று இப்படத்தை பார்க்க நேர்ந்தது.

சன் டிவி முக்கிய தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ஷாமிலி! குழந்தை பிறந்தபின் இவ்வளவு குண்டா ஆகிட்டாங்களே..!

34

மேலும் பல ரசிகர்கள் 'ஜெயிலர்' படத்தை காலை 9 மணிக்கு வெளியான போது கண்டு களித்தனர். ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளின் வாசலில் அவரது ரசிகர்கள் ஆரவாரத்தோடு படத்தை வரவேற்ற நிலையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்களுடன் சேர்ந்து பிரபலங்கள் பலரும் FDFS காட்சியை பார்க்க திரையரங்கிற்கு படையெடுத்தத்தனர்.

44

இந்நிலையில்  ரசிகர்களுடன் சேர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பமும் ஜெயிலர் படத்தின் FDFS  காட்சியை, கேக் வெட்டி செலபிரேட் செய்து கண்டுகளித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களை ரோகிணி திரையரங்கம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 'JAILER' என எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட கேக்கை, ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அனிருத் பெற்றோர் உள்ளிட்ட பலர் கட் செய்து ரசிகர்களுடன் ரோகிணி திரையரங்கில் காலை 9 மணி காட்சியை பார்த்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயித்தாரா ஜெயிலர்?... ரஜினிக்கு கம்பேக் கொடுத்தாரா நெல்சன்? - Jailer முழு விமர்சனம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories