2023-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஜெயிலர் படமும் ஒன்று. ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. ஜெயிலர் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கும், பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கும் திரையிடப்பட்டது. ஜெயிலர் படம் பார்த்த ரசிகர்கள், படம் மிகவும் மாஸ் ஆக இருப்பதாக கூறி வருகின்றனர். இப்படி பாசிடிவ் விமர்சனங்களை குவித்து வரும் ஜெயிலர் திரைப்படத்திற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.