ரஜினியை டோட்டலாக மாற்றிய நெல்சன்... ஜெயிலர் படத்துக்காக புதிய தோற்றத்தில் சூப்பர்ஸ்டார் - வைரலாகும் போட்டோ

First Published Mar 31, 2023, 2:47 PM IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சூப்பர்ஸ்டாரின் நியூலுக் போட்டோ வெளியாகி உள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஷிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, வஸந்த் ரவி, ரோபோ சங்கர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பின்னணி பணிகளை முடித்து இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தை தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அயோத்தி முதல் பஹிரா வரை... இந்த வாரம் மட்டும் இத்தனை தமிழ் படங்கள் ஓடிடியில் ரிலீஸா..! முழு லிஸ்ட் இதோ

ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். முதலில் அவர் தாடியுடன் இருக்கும்படியான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது தாடி முழுவதையும் ஷேவ் செய்துவிட்டு புது லுக்கிற்கு மாறி உள்ளார் ரஜினி. சூப்பர்ஸ்டார் புதிய தோற்றத்தில் உள்ள புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதனால் தான் இதில் மலையாளத்தில் இருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து ஷிவ ராஜ்குமார், தெலுங்கில் இருந்து வில்லன் நடிகர் சுனில், இந்தியில் இருந்து ஜாக்கி ஷெராப் போன்ற பிரபலங்களை நடிக்க வைத்திருக்கிறாராம் நெல்சன். இதனால் ஜெயிலர் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... Vetrimaaran : திரையரங்கில் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு - இயக்குனர் வெற்றிமாறன் கண்டனம்

click me!