ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட ரஜினிக்கு தாயுமானவனாக இருந்த உடுப்பிகாரர்! கலங்கவைக்கும் superstar-ன் மறுபக்கம்

First Published | Dec 12, 2022, 8:23 AM IST

73-வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கும் நிலையில், அவரைப்பற்றிய சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பஸ் கண்டெக்டராக இருந்த ஒருவர் தன்னுடைய ஸ்டைலால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன்வசப்படுத்தி, கோலிவுட் திரையுலகுக்கே சூப்பர்ஸ்டார் ஆகுறது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி ஒரு உச்சத்துக்கு போயும் இன்னும் ஒரு எளிமையான மனிதனாக இருப்பது அசாத்தியமான ஒன்று. இப்படி அசாத்தியத்தை சாத்தியப்படுத்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அவரைப்பற்றிய சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தமிழ்சினிமாவில் முன்னணியில் இருக்கும் பல நடிகர்கள் வறுமையை வென்று தான் இந்த இடத்தை பிடித்திருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் பட்ட கஷ்டங்கள் ஏராளம். அந்த வகையில் ரஜினி தனது ஆரம்ப காலகட்டத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டபோது அவருக்கு உதவியவரை பற்றியும், அதற்கு நன்றிக்கடனாக ரஜினி செய்த உதவியை பற்றியும் தான் தற்போது பார்க்கப்போகிறோம்.

தற்போது சென்னையில் இருக்கும் செம்மொழிப் பூங்கா தான் தமிழ் சினிமாவில் சாதிக்கவேண்டும் என்கிற வெறியோடு வந்த ஏராளமானவர்களின் கூட்டாரமாக அமைந்திருந்தது. அந்த காலத்தில் அது டிரைவ் இன் ரெஸ்டாரண்டாக இருந்துள்ளது. ஆரம்பகாலத்தில் வறுமையில் இருந்த ரஜினியை பசியாற்றியது அந்த இடத்தில் இருந்த உட்லாண்ட்ஸ் ஹோட்டல் தானாம்.

ரஜினி கஷ்டப்பட்ட காலத்தில் பெரும்பாலும் அவருக்கு காலை மற்றும் இரவு உணவு இருக்காதாம். ஒரே வேளை தான் அதுவும் மதியம் மட்டும் தான் சாப்பிடுவாராம் ரஜினி. தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒருவேளை உணவை மட்டும் சாப்பிட்டு பசியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு அந்த ஓட்டலில் சர்வராக பணியாற்றிய நாராயண ராவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Tap to resize

இதனால் ரஜினி சாப்பிட வந்தால், ஸ்பெஷலாக கவனிப்பாராம் நாராயண ராவ். சொல்லப்போனால் ரஜினிக்கு தாயுமானவனாக இருந்தது அவர் தான். பயங்கர பசியோடு வரும் ரஜினிக்கு உணவுகளை தேவைக்கு அதிகமாகவே வைத்து பசியாற்றுவாராம் நாராயண ராவ். ஒருசில நாட்களில் ரஜினியால் காசு கொடுக்க முடியவில்லை என்றால் தன்னுடைய சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுமாறு சொல்லுவாராம் நாராயண ராவ்.

பின்னர் ரஜினி சினிமாவில் நடிக்கத்தொடங்கி மெல்ல மெல்ல வெற்றியடைந்து மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டார். அந்த சமயத்தில் ரஜினிக்கு நாரயண ராவ்வின் நினைவு வந்து, அவரைத்தேடு அந்த ஓட்டலுக்கு சென்று விசாரித்துள்ளார். அவர் பல வருடங்களுக்கு முன்பே வேலையை விட்டு நின்றுவிட்டதாக கூறியதை அடுத்து தான் படங்களில் பிசியாக இருந்ததால், தன் நண்பர்களை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று விசாரிக்க சொல்லியுள்ளார் ரஜினி.

இதையும் படியுங்கள்... சூப்பர் ஸ்டார் நாயகனாக அறிமுகமானது தமிழில் இல்லை. ரஜினி யார் இயக்கத்தில் ஹீரோவானார் தெரியுமா?

அப்படி நீண்ட நெடிய தேடலுக்கு பின் நாராயண ராவ் உடுப்பியில் இருப்பதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உடனடியாக அவரை சந்திக்க ரஜினி நேரில் சென்றுள்ளார். அப்போது மிகவும் வயதான தோற்றத்தில் இருந்துள்ளார் நாராயண ராவ். மிகப்பெரிய தொகையை அவரது வங்கிக் கணக்கில் போட்டுவிட்டு அதன்மூலம் வரும் வட்டியின் மூலம் அவர் குடும்பத்தை நடத்தும் வகையில் ஒரு பெரும் உதவியை செய்தாராம் ரஜினி. அதோடு மட்டும் இல்லாமல் நாராயண ராவ்வின் மகனுக்கு முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கியும் கொடுத்துள்ளார் ரஜினி. 

கஷ்டப்பட்ட காலத்தில் தனக்கு உதவிய நாராயண ராவ் போன்ற பலருக்கும் வெளியில் தெரியாமல் பல்வேறு உதவிகளை செய்துள்ளாராம் ரஜினி. இப்படிப்பட்ட மனம் உள்ள மனிதனை யாருக்கு தான் பிடிக்காது. அதனால் தான் இன்றளவுக்கு அவர் சூப்பர்ஸ்டாராக் திகழ்கிறார்.

இதையும் படியுங்கள்... 70களில் துவங்கி இன்னும் ஜொலிக்கும் சூப்பர்ஸ்டார்... புகைப்படங்கள் உள்ளே !!

Latest Videos

click me!