40 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி - கமல்..!! அடடே அதுவும் இவர் டைரக்‌ஷன்லயா?

Published : Aug 19, 2025, 11:07 AM IST

கடந்த 40 ஆண்டுகளாக இணைந்து நடிக்காமல் இருந்து வந்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்திருக்கிறது.

PREV
14
Rajini Kamal Act Together After 40 Years

தமிழ் சினிமாவில் இருபெரும் ஆளுமைகளாக இருந்து வருபவர்கள் தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவரையும் திரையுலகில் அறிமுகப்படுத்தியது கே.பாலச்சந்தர் தான். அவர் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் இவர்களை வைத்து ஏராளமான படங்களையும் இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். ரஜினியும், கமலும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக நடித்து வந்தனர். 15க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் கடந்த 1985-ம் ஆண்டுக்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கக்கூடாது என கூட்டாக முடிவெடுத்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

24
டிராப் ஆன ரஜினி - கமல் படம்

இதற்கிடையில் கடந்த 2020ம் ஆண்டு ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகமானதால் அப்படத்தை அப்படியே டிராப் செய்துவிட்டனர். இதன்பின்னர் தான் கமலை வைத்து விக்ரம் என்கிற மாஸ் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கினார் லோகி. அதன்பின்னர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்த லோகேஷ், அண்மையில் ரஜினிகாந்தை வைத்து கூலி என்கிற ஆக்‌ஷன் படத்தை இயக்கினார். அப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது.

34
40 ஆண்டுகளுக்கு பின் இணையும் கூட்டணி

இதனிடையே, கூலி படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ், கைதி 2 படத்தை தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீர் ட்விஸ்டாக வேறு ஒரு படம் பக்கம் தாவி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அவர் இயக்க உள்ள அடுத்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டும் உறுதியானால் தமிழ் சினிமாவின் மைல்கல் படமாக இது அமைய வாய்ப்பு உள்ளது.

44
கம்பேக் படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருவதால், அவருக்கு கம்பேக் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கமல்ஹாசனும் தக் லைஃப் தோல்வியால் பின்னடைவை சந்தித்துள்ளார். அவருக்கும் இது கம்பேக் படமாக அமைய வாய்ப்பு உள்ளது. இந்தக் கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைதி 2 படத்திற்கு முன்னதாகவே இப்படத்தை இயக்கி முடிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories