யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில், தற்போது லேட்டஸ்டாக சிவகார்த்திகேயன் பட நடிகையும் இணைந்திருக்கிறார்.
கன்னட திரையுலகைச் சேர்ந்த இளம் நடிகையான ருக்மிணி வசந்த், ரக்ஷித் ஷெட்டி நடித்த ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தில் கண்களாலேயே மயக்கி பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். இவர் சமீபத்தில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவில் அதிகம் விரும்பப்படும் நடிகையாக மாறி இருக்கும் ருக்மிணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
24
ருக்மிணி வசந்த் கைவசம் உள்ள படங்கள்
அதோடு, வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள காந்தாரா-பகுதி 1ல் கனகவதியாக ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இதுதவிர, தமிழில் சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்தில் நடித்துள்ளார் ருக்மிணி வசந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரைக்கு வர உள்ளது. மேலும் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படத்திலும் ருக்மிணி வசந்த் நடிக்கிறார். இதற்கிடையில், ருக்மிணி வசந்த் பற்றிய மற்றொரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
34
டாக்ஸிக் பட ஹீரோயின்கள்
சமீபத்திய நாட்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்' படத்திலும் ருக்மிணி வசந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. கீது மோகன்தாஸ் இயக்கும் இந்தப் படம், அதன் பன்முக நட்சத்திரப் பட்டாளத்தால் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா போன்ற நடிகைகள் ஏற்கனவே இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ருக்மிணி வசந்த் இந்த வலிமையான நட்சத்திரப் பட்டாளத்தில் இணைகிறார் என்று கூறப்படுகிறது.
டாக்ஸிக் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், ருக்மிணி ஏற்கனவே இந்தப் படத்திற்காக ஒன்று அல்லது இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், படக்குழுவினர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வெங்கட் நாராயணனின் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்டு, பல மொழிகளில் வெளியாகவுள்ளது. டாக்ஸிக் படத்திற்கு ராஜீவ் ராய் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் 2026 மார்ச் 19 அன்று வெளியாகவுள்ளது.