தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பல முக்கிய பிரபலங்கள் இந்த ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதன் புகைப்பட தொகுப்பை பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல முக்கிய பிரபலங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
211
வரிசையில் நின்று வாக்களித்த ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வியாழக்கிழமை அன்று சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள 237-வது வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குச்சாவடிக்கு வந்த அவர், தனது வாக்கை செலுத்திய பிறகு, மை வைக்கப்பட்ட விரலை பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.
311
ஜோடியாக ஓட்டு போட்ட சினேகா பிரசன்னா
நடிகை சினேகா தன்னுடைய கணவர் பிரசன்னாவுடன் ஜோடியாக வந்து வாக்களித்துள்ளார். அதன்பின் எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
நடிகர் ஜீவாவும் வரிசையில் நின்று வாக்களித்தார். அதேபோல் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் குஷ்பு சுந்தர், மயிலாப்பூரில் தனது வாக்கை செலுத்தினார். வாக்களித்த பின் பேசிய அவர், அனைவரும் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "என் முகத்தில் இருக்கும் புன்னகையே எல்லாம் சொல்லும். ஓட்டு போடுவது எனது மிகப்பெரிய ஜனநாயக உரிமை. ஒரு குடிமகளாக இது எனக்கு ரொம்ப முக்கியம்... மக்கள் முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. முடிவை அவர்களிடம் விட்டுவிடுகிறோம்," என்று அவர் கூறினார்.
511
மனைவியோடு வந்து வாக்களித்த எஸ்.கே
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தி உடன் வந்து வாக்களித்துள்ளார். இவர்களைப் போலவே மாநிலம் முழுவதும் வாக்காளர்களுடன் பல பிரபலங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை காலை தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று மாலை 6:00 மணிக்கு முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
611
ஓட்டு போட்ட கமல் - ஸ்ருதி
மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளிக்கு வந்து வாக்களித்தார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், அப்பாவும் மகளும் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
711
விக்ரம் வாக்களித்தார்
நடிகர் சியான் விக்ரம் தன் வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு நடந்தே வந்து வாக்களித்தார்.
811
ஜனநாயக கடமையாற்றிய அட்லீ
ராக்கா படத்தின் இயக்குநர் அட்லீ, தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறார். அவர் தளபதியின் விசில் சின்னத்துக்கு தான் வாக்களித்துள்ளாராம்.
911
பிக் பாஸ் ஆரவ்
பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் வாக்களித்துள்ளார். இந்த தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் முக்கிய போட்டி நிலவுகிறது.
1011
ஓட்டு போட்ட சசிகுமார்
நடிகர் சசிகுமார் தன்னுடைய சொந்த ஊரில் வாக்களித்துள்ளார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) முதல் முறையாக தேர்தல் களம் காண்பதால், இந்த போட்டி மும்முனைப் போட்டியாக மாற வாய்ப்புள்ளது.
1111
முதல் ஆளாக வாக்களித்த அஜித்
நடிகர் அஜித் குமார், சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இவர்களைப் போலவே மாநிலம் முழுவதும் வாக்காளர்களுடன் பல பிரபலங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.