நினைத்தது நடக்கவில்லை.. திருமணம் நின்றுபோனதை உறுதி செய்த நடிகை 'பிக்பாஸ்' ரித்விகா!

Published : Apr 22, 2026, 04:02 PM IST

Bigg Boss Fame Riythvika: 'மெட்ராஸ்' பட நடிகை ரித்விகாவுக்கு கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் நின்று போனதை தற்போது உறுதி செய்துள்ளார்.

PREV
14
நடிகை ரித்விகா

பரதேசி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. குணச்சித்திர நடிகையாக தனது சினிமா வாழ்க்கையைத் துவங்கிய இவர், பின்னர் 'சந்தித்ததும் சிந்தித்தும்', 'நினைத்து யாரோ', 'மெட்ராஸ்' போன்ற படங்களில் நடித்தார். குறிப்பாக மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதையும் பெற்றார்.

24
பிக்பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னர்:

குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதைத்தொடர்ந்து இவர் ஹீரோயினாக சில படங்களில் நடித்தாலும், அந்த படங்கள் பெரிதாக வெற்றிபெறாமல் போனது.

34
திருமணம் நின்று போனது

33 வயதாகும் திருமணம் ஆகாமல் இருக்கும் ரித்விகாவுக்கு கடந்த ஆண்டு வினோத் லட்சுமணன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், கடைசி நேரத்தில் தனிப்பட்ட காரணங்களால் திருமணம் நின்று போனதாகவும், புதிய திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

44
திருமணம் ரதானத்தை உறுதி செய்த நடிகை

ஒரு வருடத்திற்கு மேலாகியும் திருமணம் குறித்த எந்த ஒரு அப்டேடும் வெளியாகாத நிலையில், ரசிகர் ஒருவர் “உங்கள் திருமணத்தில் ஏதேனும் பிரச்சனையா?” என கேள்வி எழுப்ப, அதற்கு “நினைத்தது நடக்கவில்லை” என கூறி தன்னுடைய திருமணம் நின்றுவிட்டதை அறிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் தற்போது வரை இதற்கான காரணம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories