அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் யார்... யார்?
ராஜமவுலி மற்றும் அட்லீயை தொடர்ந்து 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் இயக்குனர் என்றால் அது சந்தீப் ரெட்டி வங்கா தான். அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களை இயக்கிய அவர் அடுத்ததாக பிரபாஸின் ஸ்பிரிட் படத்தை இயக்க ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். அடுத்ததாக பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ரூ.80 கோடியும், புஷ்பா பட இயக்குனர் சுகுமார் ரூ.75 கோடியும், கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் ரூ.60 கோடியும், பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ரூ.55 கோடியும், இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் தலா ரூ.50 கோடியும் சம்பளம் வாங்குகிறார்கள்.
இதையும் படியுங்கள்... அல்லு அர்ஜூன் படத்திற்கு அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா? ஜவானை விட 4 மடங்கு அதிகமா?