காதலரோடு திருமணத்திற்கு ஷாப்பிங் செய்யும் 'ராஜா ராணி' சீரியல் நடிகை வைஷாலி!! வைரலாகும் போட்டோஸ்!!

Published : Oct 02, 2021, 01:30 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' (Raja Rani Serial) சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் வைஷாலி (Vaishali). பின்னர் 'பாண்டியன் ஸ்டோர்' (Pandian Store Serial) சீரியலில் நடித்த இவரை திடீர் என, சீரியல் குழுவினர் நீக்கியதாக கூறினார். இவருக்கும் இவருடைய காதலருக்கு தற்போது திருமணம் நடைபெற உள்ள நிலையில், இவர் திருமண ஷாப்பிங் (wedding shopping) செய்து வருவதாக அவரே புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.  

PREV
16
காதலரோடு திருமணத்திற்கு ஷாப்பிங் செய்யும் 'ராஜா ராணி' சீரியல் நடிகை வைஷாலி!! வைரலாகும் போட்டோஸ்!!

வைஷாலி, சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பே நடிகர் விஷால் நடிப்பில் வெளியான 'கதகளி' படத்தில் சிறிய வேடத்தில் நடித்து பிரபலமானவர்.

 

 

26

அதன் பின்னர் காதல் கசகுதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ போன்ற படங்களில் பல படங்களில் சின்ன வேடங்களில் நடித்தாலும், சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை.

 

 

36

எனவே தன்னுடைய கவனத்தை சீரியல்கள் பக்கம் திருப்பினார். ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.  

 

 

46

இதை தவிர மற்ற சில தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை, லக்ஷ்மி வந்தாச்சு, போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

 

 

56

இந்நிலையில், இவருக்கும் இவருடைய நீண்ட நாள் காதலருக்கு ஏற்கனவே, திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது.

 

 

66

தன்னுடைய காதலர் சத்யாவுடன் இவர், திருமண ஷாப்பிங் செய்யும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலர், திருமணம் எப்போது என்ற கேள்வியுடன் இவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

click me!

Recommended Stories