குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவில் சமந்தா - நாக சைதன்யா ஜோடி? முடிவுக்கு வருமா விவாகரத்து வதந்தி..!!

Published : Oct 02, 2021, 10:43 AM IST

நடிகை சமந்தா (Samantha), நாகசைதன்யா (Naga Cahitanya) ஜோடி ஒரேயடியாக விவாகரத்து வதந்திக்கு (Divorce Rumors) முற்றுப்புள்ளி வைக்க தற்போது, குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.  

PREV
17
குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவில் சமந்தா - நாக சைதன்யா ஜோடி? முடிவுக்கு வருமா விவாகரத்து வதந்தி..!!

கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல், தொடர்ந்து வெளியாகி வந்தாலும் இருவருமே இது குறித்து இன்னும் முழுமையாக விளக்கம் கொடுக்கவில்லை.

 

27

ஆனால் சமீபத்தில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா, பிரபல ஆங்கில ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், நான் சிறிய வயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் கடைபிடித்து வருகிறேன். சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. என்று தெரிவித்திருந்தது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்தது.

 

37

அதே போல் நடிகை சமந்தாவும் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், நாளுக்கு நாள்... விவாகரத்து குறித்த வதந்திகள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

 

47

அதே போல் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் சமந்தா தனது ஆடை பிராண்ட் சாகியின் முதலாம் வருட ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய பதிலுக்கு மிகவும் கூலாக தன்னுடைய பதிலை அளித்தார்.

 

57

அப்போது ரசிகர் ஒருவர், சமந்தா ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு குடியேற உள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்டார். இதற்க்கு சமந்தா நான் ஹைதராபாத்தில் தான் இருக்க போகிறேன் என பதிலளித்தார்.

 

67

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், சமந்தா - நாக சைதன்யா ஜோடி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஒருவேளை இந்த தகவல் உண்மையானால் விவாகரத்து குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

 

77

மேலும் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், மற்றும் சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகாததற்கு காரணம், இவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் உள்ளது தான் என கூறப்படுகிறது.

 

 

click me!

Recommended Stories