விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி.
210
சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.
310
இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் அதை மறைத்தாலும், பின்னர் ஓப்பனாக காதலை தெரிவித்தனர்.
410
தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மான்ஸா... எளிமையான காட்டன் சேலையில் வெளியிட்ட கியூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
510
இவர்களது காதலுக்கு சில காரணங்களாக பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர், 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது.
610
திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து சீரியலில் ஆல்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
710
கர்ப்பமாக இருந்ததால், எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார், இவரது கணவர் சஞ்சீவ் மட்டுமே சீரியலில் நடித்து அந்த நிலையில் இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஐலா சையத் என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்தது.
810
ஐலாவிற்கு தற்போது ஒரு வயது ஆகும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக ஆகியுள்ளார் ஆல்யா. இதை சமீபத்தில் அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.
910
எனினும் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜ ராணி 2 தொடரில் நடித்து வரும் அல்யா அவ்வப்போது விதவிதமான புடவையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
1010
அந்த வகையில் விதவிதமான... மிகவும் எளிமையான காட்டன் சேலையில் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.