நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
திருமண வாழ்க்கையில் சமந்தா இந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார்.
தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இந்நிலையில், நடிகை சமந்தா அடுத்ததாக நடிக்க உள்ள வெப் தொடர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘பேமிலிமேன் 2’ வெப்தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே அடுத்ததாக இயக்கும் வெப் தொடரில் சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
இந்த வெப் தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளாராம். இந்த வெப் தொடருக்கு சிடாடெல் (Citadel) என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த வெப்தொடரை அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் தயாரிக்க உள்ளார்களாம். பிரம்மாண்ட பொருட்செலவில் அவர்கள் இந்த வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.