ராஜா ராணி சீரியல் 2வுக்கு வந்த சோதனை...இவங்களும் விலக போறாங்களா?

Kanmani P   | Asianet News
Published : May 16, 2022, 03:42 PM IST

ராஜா ராணி 2விலிருந்து ஆலியா வெளியேறியதை அடுத்து தற்போது அதிலிருந்து மேலும் ஒரு நடிகை வெளியேறவுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV
14
ராஜா ராணி சீரியல் 2வுக்கு வந்த சோதனை...இவங்களும் விலக போறாங்களா?
raja rani 2 serial

முந்தையா ராஜா ராணி சீரியலில் அறிமுகமான ஆலியா -சஞ்சீவ் ஜோடிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த தொடர் மூலம் காதல் வசப்பட்ட இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடியாக முடிவெடுத்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பின்னரும் சீரியலில் சீரியஸாக நடித்து வருகிறது  இந்த ஜோடி. சஞ்சய் சன் ஒளிபரப்பாகவும் கயல் நாடகத்திலும், ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2-விலும் நடித்து வந்தனர். 

24
raja rani 2 serial


விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஆல்யா மானசா முந்தைய தொடருக்கு எதிர்மாறான கதாபாத்திரத்தில் தில்லானா பெண்ணாக நடித்து வந்தார். அதோடு போலீஸ் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பெண்ணின் தந்தை திடிரென உயிரிழந்த காரணத்தால் அவரது அண்ணன் தங்கையை படிக்காத நாயகனுக்கு திருமணம் முடித்து வைக்கிறார். கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டாலும் நாயகி குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக நடிக்கும் கதாபாத்திரத்தை அழகாக எடுத்து சென்றார் ஆலியா

34
raja rani 2 serial

இதற்கிடையே இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த ஆலியா ராஜா ராணி சீரியலில் இருந்து விலகி விட்டார். இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆலியா விலகியதன் காரணமாக இந்த சீரியலின் டிஆர்பி படு மோசமானது. பின்னர் ஆலியாவுக்கு பதிலாக இவருக்கு பதிலாக அறிமுக நடிகை ரியா சந்தியாவாக நடித்து வருகிறார்.

44
raja rani 2 serial

இந்நிலையில் நாயகிக்கு நிகரான ஆதரவை பெற்று வந்த வில்லி சந்தியாவாக நடித்து வந்த வி ஜே அர்ச்சனா இந்த  சீரியலில் இருந்து விலகுவதாக வெளிவந்துள்ள செய்தி அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது கர்ப்பமாக இருப்பது போன்ற கதாப்பாத்திரத்தில் அர்ச்சனா தோன்றி வருகிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories