அடுத்தடுத்து கைமாறும் சன் டிவி சீரியல்ஸ். ராதிகா சொன்ன நியூ அப்டேட்..

Published : May 12, 2022, 11:33 AM IST

ஏற்கனவே கைமாறியா இரண்டு சூப்பர் ஹிட் சீரியல்ஸை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பிரபல சீரியல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

PREV
18
அடுத்தடுத்து கைமாறும் சன் டிவி சீரியல்ஸ். ராதிகா சொன்ன நியூ அப்டேட்..
sun tv serial

சன் டிவியில் மிகவும் பிரபலமான சிரியலாக ஒளிபரப்பாகி வந்த சீரியலில் ஒன்று தான் தென்றல். இந்த சீரியலில் தொகுப்பாளர் தீபக் மற்றும் ஷ்ருதி ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விகடன் டெலிவிஷன் தயாரித்திருந்த இந்த சீரியலுக்கு ஏகபோக ரசிகர்கள் உள்ளனர்.

28
sun tv serial

அதேபோல பிரபல சீரியல் இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் நாடகமும் மிகவும் பிரபலம். நடிகை தேவயாணி இதன் மூலம் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்தார். கிட்டத்தட்ட 1533 எபிசோடுகளாக இல்லத்தரசிகளை கவர்ந்திருந்தது கோலங்கள். 

38
sun tv serial

மேற்குறிப்பிட்ட கோலங்கள், தென்றல் என்கிற இரு பிரபல சீரியல்களை தற்போது மீண்டும் மறு ஒளிபரப்பாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.  

48
sun tv serial

இந்நிலையில் ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்திருந்த வாணி ராணி சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக ராதிகா அறிவித்துள்ளார்.

58
sun tv serial

சினிமா திரையுலகில் கொடிகட்டி பறந்த முன்னணி நாயகி ராதிகா சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் கால் பதித்தார். சித்தி என்னும் சீரியலில் ராதிகா நடித்து இல்லத்தரசிகளை வெகுவாக ஈர்த்தார்.

68

இதையடுத்து அண்ணாமலை,செல்வி, அரசி, வாணி ராணி, சித்தி இரண்டாம் பாகம் உள்ளிட்ட சீரியல்களில் தோன்றியிருந்தார். இதில் வாணி ராணியில் இரட்டை வேடத்தில் ராதிகா நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

 

78
sun tv serial

மேலும் தனது சொந்த தயாரிப்பான ராடான் மீடியா மூலம் இவர் நடித்த சித்தி, அண்ணாமலை, அரசி,வாணிராணி, சித்தி 2 வையும் தாமரை சீரியலையும் தயாரித்துள்ளார் ராதிகா. 

88
sun tv serial

தற்போது சித்தி 2விலிருந்து விலகி படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் ராதிகா சமீபத்திய ப்ரோமோ ஒன்றில் தோன்றியுள்ளார். அதாவது கலைஞர் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாக உள்ள பொன்னி ராணி என்னும் சீரியலில் வாணி ராணி வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories