என்னது கார்த்தி அரசியலுக்கு வருகிறாரா?.. புது குண்டை போட்ட ரசிகர்கள்!

First Published May 12, 2022, 10:35 AM IST

விரைவில் பிறந்த நாள் காண உள்ள நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் புதுவிதமான போஸ்டர் ஒன்றை ஒட்டி பீதி கிளப்பி உள்ளனர். அந்த போஸ்டரில் கார்த்தியின் அரசியல் பிரவேசம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

actor karthi

 பருத்திவீரன் தொடங்கி கார்த்தி 25 வரை தனது வெற்றிக் கொடியை நாட்டி வரும் நடிகர் கார்த்தி வருகிற 25-ஆம் தேதி தனது 44-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அதோடு பல முக்கிய சோசியல் ஆக்டிவிட்டிஸுலும் ஈடுபட்டு வருகிறார் கார்த்தி.

actor karthi

நியூயார்க்கில் சினிமா தொடர்பான படிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய கார்த்தி இயக்குனர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். இந்த படத்தில் கார்த்தியின் அண்ணன் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Actor Karthi

 பின்னர் நாயகனாக களமிறங்கிய கார்த்தி கடந்த 2005ஆம் ஆண்டு பிரியாமணியுடன் பருத்தி வீரன் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து இருந்தார். இந்த படத்தை அமீர் இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படம் பல விருதுகளையும் குவித்தது.

actor karthi

முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை தட்டிச் சென்ற கார்த்தி. அடுத்ததாக செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி என அடுத்தடுத்து ரசிகர்களின் மனதை வென்ற நல்ல படங்களில் நடித்துள்ளார்.

actor karthi

பருத்திவீரன் வீரனுக்குப் பிறகு காமெடியை மையமாக கொண்ட படங்களில் நடித்து வந்த கார்த்தி பின்னர் கொம்பன் படத்தின் மூலம் மீண்டும் கிராமத்து நாயகனாக ரீ-என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களிலும் பருத்தி வீரனை பிரதிபலித்த கார்த்தி தற்போது விருமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

actor karthi

கார்த்தி தற்போது கொம்பன், மருதுபாண்டி, தேவராட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இந்தப் படத்தில் ஹீரோயினியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.

actor karthi

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கிராமத்து கதையம்சம் கொண்டது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வரும் இப்படம் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகும் என தகவல் சொல்கிறது.

actor karthi

தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன், கார்த்தி 24, கார்த்தி 25 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் கார்த்தி குறித்த சமீபத்திய போஸ்டர் ஒன்று செம வைரலாகி வருகிறது.

actor karthi

வரும் மே 25ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டரில் ஒரு புறம் எம்ஜிஆர், மறுபுறம் கலைஞரும் நடுவில் கார்த்தி பின்புறம் தலைமைச்செயலகம் என அரசியலுக்கு கார்த்தி வருவது போன்ற போஸ்டரை வெளியிட்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதோடு  நல்ல எண்ணங்களை மக்களிடம் சேர்ப்போம் என்னும் வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது.

click me!