Radhika's Surgery: ராதிகாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை! என்ன ஆச்சு? மகளிர் தினத்தில் பகிர்ந்த வலிமையான பதிவு!

Published : Mar 08, 2025, 03:09 PM IST

நடிகை ராதிகா சரத்குமார், தனக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்ட தகவல் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
16
Radhika's Surgery: ராதிகாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை! என்ன ஆச்சு?  மகளிர் தினத்தில் பகிர்ந்த வலிமையான பதிவு!

மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் மகள் தான் ராதிகா சரத்குமார். இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் 1978-ஆம் ஆண்டு வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், அடுத்த 2 வருடங்களில் முன்னணி நடிகையாக மாறினார். கதாநாயகியாக மட்டும் இன்றி கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்தார்.

26
முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்

பாக்யராஜ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், என 80-பது காலகட்டத்தில் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். திருமணத்திற்க்கு பின்னர் ஹீரோயின் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், தொடர்ந்து அழுத்தமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

 

36
கணவருக்கே அம்மாவாக நடித்தவர் ராதிகா

பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார் ராதிகா. இவ்வளவு ஏன்? தன்னுடைய கணவர் சரத்குமாருக்கே மனைவியாகவும் - அம்மாவாகிவும் 'சூரிய வம்சம்' படத்தில் நடித்துள்ளார் ராதிகா. அதே போல் 90'ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த, விஜய், அஜித், பிரஷாந்த், போன்ற நடிகர்களுக்கும் அம்மாவாக பல படங்களில் நடித்துள்ளார்.

46
ஓய்வில்லாமல் நடித்து வந்த நடிகை ராதிகா

சினிமாவில் மட்டும் இன்றி, சீரியலிலும் நடித்துள்ள நடிகை ராதிகா... தயாரிப்பாளர், தொகுப்பாளர், என பன்முக திறமையாளராக இருப்பவர். ஓய்வில்லாமல் மிகவும் துறுதுறுவென ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டே இருக்கும் ராதிகா, தனக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
 

56
முழங்காலில் நடந்த அறுவைசிகிச்சை

அதில் "என்னைப் பற்றியோ என் வேலையைப் பற்றியோ ஒருபோதும் பேச மாட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் கொடுமையாக இருந்தது, இரண்டு படங்களின் லொகேஷனில் இருந்தபோது, என் முழங்காலில் காயம் ஏற்பட்டது. 

தற்போது இதற்க்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சையாக தான் இருந்தது. பின்னர் என் வேளையில் ஒரு மராத்தான் ஓட துவங்கினேன். வலி நிவாரணிகள், முழங்கால் பிரேஸ், கிரையோதெரபி ஆகியவை அணிந்து வலியுடன் வேலை செய்தேன்.  நான் வலியால் துடித்தபோது எனக்கு ஆதரவாக இருந்த என் குடும்பத்திற்கு கடமைப்பட்டுள்ளேன். 

66
கணவர் தான் என்னுடைய தூண்

ஒரு நண்பர் சொன்னார், "இந்த தயாரிப்பாளர்கள் இதைச் செய்து படங்களை முடித்ததற்கு உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்", நான் எதையும் எதிர்பார்க்கவில்லை, ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, நான் என்னால் முடிந்தவரை வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இந்த மகளிர் தினத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றியும், தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், உங்களை அதிகமாக நேசிக்கவும், உங்கள் வாழ்க்கையைப் பாராட்டவும் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

அதே போல் எதிர்பார்ப்புகள் இல்லை என் மிகப்பெரிய தூண், மற்றும் வலிமை தங்க இதயம் கொண்ட என் கணவர் சரத்குமார் ஒரு குழந்தையை போல என்னை கவனித்துக் கொட்டினார். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள், வலுவாக இருங்கள் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories