Thaai Kizhavi Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸ் குயினாக மாறிய தாய் கிழவி... முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Published : Feb 28, 2026, 08:57 AM IST

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் தாய் கிழவி திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூலித்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Thaai Kizhavi Day 1 Box Office

நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் தாய் கிழவி. இப்படத்தை சிவகுமார் முருகேசன் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி உள்ளார். இவர் காக்கா முட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் கடைசி விவசாயி திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ராதிகா உடன் முனீஸ்காந்த், சிங்கம்புலி, பால சரவணன், அருள்தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 27ந் தேதி ரிலீஸ் ஆனது.

24
ஹைப் உடன் ரிலீஸ் ஆன தாய் கிழவி

ரிலீசுக்கு முன்பே தாய் கிழவி படத்திற்கு மிகப்பெரிய அளவில் ஹைப் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் தான். அப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அப்படத்தை இயக்கிய இயக்குனருடன் தன்னுடைய அடுத்த படத்தை தொடங்கி, அதற்கான டீசரையும் வெளியிட்டார் எஸ்.கே. இதைப்பார்த்து வியந்துபோன ரசிகர்கள், தாய் கிழவி படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த நிலையில், அப்படத்தின் டீசர் மற்றும் டிரெயிலர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இதனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக தாய் கிழவி மாறியது.

34
அமோக வரவேற்பை பெறும் தாய் கிழவி

ரிலீசுக்கு முன்னர் இப்படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்த பிரபலங்களும் ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளியதால், இப்படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாய் கிழவி திரைப்படம் நேற்று திரைக்கு வந்தது. படம் பார்த்த ரசிகர்களும் படத்தை புகழ்ந்து வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்த பாசிடிவ் விமர்சனங்களால் படத்தின் வசூலும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

44
தாய் கிழவி முதல் நாள் வசூல்

அதன்படி தாய் கிழவி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் ரூ.2.5 கோடி வசூலை வாரி சுருட்டி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில்; முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக தாய் கிழவி படம் வசூலித்துள்ளது திரையுலக வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால், தாய் கிழவி படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு போட்டியாக பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் தாய் கிழவி, பாக்ஸ் ஆபிஸ் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories