ரச்சிதா உடன் என்னதான் பிரச்சனை... விவாகரத்து செய்தது உண்மையா? - முதன்முறையாக மனம்திறந்த தினேஷ்

Published : Jul 20, 2022, 07:41 AM ISTUpdated : Jul 20, 2022, 08:23 AM IST

சீரியல் நடிகை ரச்சிதாவை விவாகரத்து செய்ததாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து முதன்முறையாக அவரது கணவர் தினேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

PREV
15
ரச்சிதா உடன் என்னதான் பிரச்சனை... விவாகரத்து செய்தது உண்மையா? - முதன்முறையாக மனம்திறந்த தினேஷ்

சின்னத்திரை சீரியல்களில் மக்களால் கொண்டாடப்பட்ட சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சி தான். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலில் மீனாட்சியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் இதில் ரியோவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

25

நடிகை ரச்சிதா, கடந்த 2015-ம் ஆண்டு சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் சீரியல்களில் நடித்து வந்தனர். குறிப்பாக நாச்சியார்புரம் என்கிற சீரியலில் கூட இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலின் போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

35

தற்போது நடிகை ரச்சிதா சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதால் இவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. முதலில் இவர் தனது கணவர் தினேஷை விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்பட்டது. பின்னர் இவர் இயக்குனர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் பரவின.

இதையும் படியுங்கள்... கிழிந்து தொங்கும் குட்டை பாவாடையில்... கையில் பூவோடு குலுங்க குலுங்க கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் லாஸ்லியா!

45

ஆனால் இதற்கு ரச்சிதா தரப்பில் எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படததால் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் எண்ணத் தொடங்கினர். இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்து வந்த தினேஷ், சமீபத்தில் மனம்திறந்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறுகையில், “ரச்சிதா உடனான பிரிவு தற்காலிகமானது தான் என கூறி இருக்கிறார்.

55

மேலும் ரச்சிதாவுடனான பிரச்சனை காலப்போக்கில் சரியாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தினேஷ், தாங்கள் இருவரும் இதுவரை விவாகரத்து செய்வதற்கான எந்த ஒரு முயற்சியையும் எடுக்க வில்லை என்றும் உறுதிபட கூறி உள்ளார். இதன்மூலம் ரச்சிதா உடனான விவாகரத்து குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தினேஷ்.

இதையும் படியுங்கள்... கொடிக்கயிற்றை தொங்கவிட்டு..கிழிந்த கவனில் தமன்னா..சிவத்த பொண்ணு..கருப்பு உடை கிளாமரில்!

click me!

Recommended Stories