தீபாவளி விருந்தாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வரவுள்ள புதுப்படங்கள் என்னென்ன?

First Published | Oct 24, 2024, 7:32 AM IST

Diwali Premiere Movies on TV : தீபாவளி பண்டிகைக்கு திரையரங்கில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவதை போல் தொலைக்காட்சிகளிலும் ஏராளமான புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

Diwali Premiere Movies on TV

தீபாவளி என்றாலே பட்டாசும், புத்தாடைகளும் முக்கிய பங்காற்றுவது போல் புதுப்படங்களும் போட்டி போட்டு ரிலீஸ் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவின் நடித்த பிளெடி பெக்கர் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. தியேட்டரை போல் டிவியிலும் புத்தம் புது படங்கள் ஒளிபரப்பப்படுவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதை பார்க்கலாம்.

Sun Tv Diwali Special Movie Raayan

ராயன்

நடிகர் தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்த படம் ராயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் தனுஷ் உடன் அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் தான் நடிகர் தனுஷின் 50வது படமாகும். தியேட்டரில் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி ரூ.150 கோடி வசூலித்த இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

Tap to resize

Kalaignar TV Diwali Special Movie Indian 2

இந்தியன் 2

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் இந்தியன் 2. இப்படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். இதில் பிரியா பவானி சங்கர், ஜெகன், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தும் இப்படம் கடந்த ஜூலை மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆனது. இந்த நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் 31-ந் தேதி தீபாவளிக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசன் vs ரஜினிகாந்த்! தீபாவளி ரேஸில் அதிக ஹிட் கொடுத்தது யார்?

Vijay TV Diwali Special Movie Maharaja

மகாராஜா

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா. இப்படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். இப்படத்தில் நட்டி நட்ராஜ், அனுராக் கஷ்யப், மம்தா மோகன் தாஸ், அபிராமி, சாச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஜூன் மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்தது. இப்படம் தீபாவளி பண்டிகைக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

Zee Tamil Diwali Special Movie Demonte Colony 2

டிமாண்டி காலனி 2

அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த ஆக்ஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வந்த படம் டிமாண்டி காலனி 2. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். திகில் படமான இது அதன் முதல் பாகத்தை விட மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. இப்படமும் தீபாவளி விருந்தாக டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 31-ந் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டிமாண்டி காலனி 2 படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்... IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் மூவீஸ் லிஸ்ட்

Latest Videos

click me!