சப்பாத்தியில் உப்பு; ஜாக்குலின் உருவ கேலி செய்து சௌந்தர்யா அடித்த கமெண்ட்!

First Published | Oct 23, 2024, 7:03 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரோமோவில் சௌந்தர்யா, ஜாக்குலினை உருவ கேலி செய்வது போல் பேசியுள்ள வீடியோ வெளியாகி உள்ளது.
 

Bigg Boss Tamil Season 8

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட, ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்குகள் வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக போட்டியாளர்களுக்கு எளிமையான டாஸ்குகளை கொடுத்த பிக்பாஸ், மூன்றாவது வாரத்தில்... கடுமையான டாஸ்குகளை கொடுக்க துவங்கி விட்டார். மேலும் இந்த வாரம் சுமார் 8 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்துள்ளனர்.

Bigg Boss Tamil Season 8 Promo

மேலும் கேப்டன்சிக்கான டாஸ்கில், சௌதர்யா வெற்றி பெற்று மூன்றாவது வார கேப்டனாக மாறியுள்ளார். மற்ற பெண் போட்டியாளர்களை காட்டிலும், ரசிகர்கள் சௌந்தர்யாவுக்கு தொடர்ந்து ஆதிகப்படியான ஆதரவு கொடுத்து வந்த நிலையில், அவரே தற்போது வாயை கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

'சிங்க பெண்ணே' சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் வாங்கும் சம்பளம்! யாருக்கு அதிகம் தெரியுமா?

Tap to resize

Soundharya Boddy Shamming Comment

அதாவது பிக்பாஸ் கொடுத்த டாஸ்கின் அடிப்படையில் தற்போது பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் ஹோட்டலாக மாறியுள்ளது. இதில் ஆண் போட்டியாளர்கள் ஹோட்டல் தொழிலாளர்களாக மாறி, தங்களின் ஹோட்டலுக்கு விருந்தினராக வரும் பெண் போட்டியாளர்களை கவனித்து கொள்ளவேண்டும் என கூறப்படுகிறது.

Jacquline Angry

இந்த டாஸ்கின் போது ஹோட்டல் மேனேஜராக இருக்கும், முத்துகுமாரனிடம் சௌந்தர்யா... "நான் சாப்பிடுவது ஒரு சப்பாத்தி, அதிலும் உப்பு. இதை நான் சாப்பிட்டால் ஜாக்குலின் மூஞ்சி மாதிரி எனக்கும் புஸுன்னு ஆகிடும் என அவரை காட்டி கூறுகிறார் . இதை தொடர்ந்து பேசும் ஜாக்குலின் காமெடிக்கு கூட இப்படி சொல்லாதே கடுப்பாகுது என கூறி, கவனமாக பேசு என்பது போல் கூறுகிறார்.  சௌந்தர்யா தான் கூறியதை நியப்படுத்தும் விதத்தில் பேசுகிறார். எனினும் சௌந்தர்யா இந்த புரோமோவில் ஜாக்குலினை உருவ கேலி செய்துள்ளது அப்பட்டமாக தெரிவதாக பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அடேங்கப்பா... ஜெயலலிதா சொந்த குரலில் இத்தனை சூப்பர் ஹிட் பாடலை பாடி இருக்கிறாரா?

Latest Videos

click me!