Published : Oct 23, 2024, 05:28 PM ISTUpdated : Oct 23, 2024, 05:41 PM IST
சன் டிவி தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும், சிங்கப்பெண்ணே சீரியலில் முக்கிய பிரபலங்கள் வாங்கும் சம்பளம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம், துவங்கப்பட்ட சீரியல் சிங்க பெண்ணே சீரியல், வெற்றிகரமாக ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த சீரியல் துவங்கப்பட்டதில் இருந்து, தொடர்ந்து TRP-யில் டாப் 3 பட்டியலை கைப்பற்றி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக புதிய சீரியல்களின் வரவால் TRP-யில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
25
Singapennea Serial Cast
ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மனிஷா மகேஷ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் - நடிகைகளில் சம்பளம் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மனிஷா மகேஷ் ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். இவரைத் தொடர்ந்து, ஜெயந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தாரணி ஒரு நாளைக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். அன்புவின் தங்கை, யாழினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா விஜயகுமார் ஒரு நாளைக்கு 5000 சம்பளமாக பெறுகிறார்.
45
Singapenne Serial
இந்த சீரியலில் முக்கிய வில்லியாக, மித்ரா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வி.ஜே.பவித்ரா ஒரு நாளைக்கு 8000 சம்பளமாக பெறுகிறார். சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தியின் தோழியாக காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோக லட்சுமி ஒரு நாளைக்கு 8000 சம்பளமாக பெறுகிறார். மகேஷ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் தர்ஷன் கவுடா, ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
அதே போல் ஆனந்தியின் அக்கா கோகிலா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிவேதா, ஒரு நாளைக்கு ரூ.6000 சம்பளமாக பெறுகிறார். அன்பு கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வரும் அமல்ஜித் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வாங்குகிறாராம். அன்புவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அஞ்சு ரூ. 8000 சம்பளமாக பெறுகிறார். ஆனந்தியின் தோழியாக சல்மா வேடத்தில் நடித்துவரும் நடிகை ஹன்சிதா விஜயன் ஒரு நாளைக்கு ரூ.6000 சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த சம்பளப்பட்டியல் குறித்து, இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.