பெண்களே பொறாமை கொள்ளும் அழகாலும், கவர்ந்திழுக்கும் பார்வையாலும் ... கோடிக்கணக்கான ரசிகர்களின் மயக்கி, தென்னிந்திய திரையுலக இளவட்ட ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தார் சில்க் ஸ்மிதா. தனது 18 வருட கால சினிமா வாழ்க்கையில், 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
சில்க் தங்களின் படத்தில் நடனம் ஆடினால், அதை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், ரஜினி, கமல், சிரஞ்சீவி போன்ற டாப் ஹீரோக்கள், தங்களின் படங்களில் சில்க் நடனம் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என விரும்பினர். ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் அந்த காலத்திலே 2 லட்சம் சம்பளமாக பெற்றார் சில்க் ஸ்மிதா.