'ராக்கா' படத்தில் அல்லு அர்ஜுன் முதல் ஜான்வி கபூர் வரை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Apr 23, 2026, 03:54 PM IST

Raaka Movie Salary Details: பான் வேர்ல்ட் திரைப்படமாக உருவாகி வரும் 'ராக்கா' படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர் அட்லீ ஆகியோர் வாங்கும் சம்பளம் குறித்த தகவலை பார்ப்போம்.

PREV
17
ராக்கா:

தென்னிந்திய சினிமாவில் மாபெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் படம் ‘ராக்கா’. பான்-இந்தியா படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை அல்லு அர்ஜுன் நடிப்பதும், அட்லீ இயக்குவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மாபெரும் பட்ஜெட், ஸ்டார் கதாப்பாத்திரங்கள் மற்றும் மேம்பட்ட VFX காட்சிகளுடன், இந்த படம் திரை ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை கொடுக்க உள்ளது.

27
அல்லு அர்ஜுன் சம்பளம்:

அல்லு அர்ஜுன் இந்த படத்தில் மூன்று வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார். காவலர், ராட்சசன் மற்றும் தந்தை என்ற ரோல்கள் அவரின் திறனையும் திரையுலகில் உள்ள அவரது ஸ்டார் பவரையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதற்காக, அவர் ₹175 கோடி சம்பளமாக பெற உள்ளார் என்று சில தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், இன்னும் சில செய்திகள் கூறுவது, அவர் profit-sharing முறையில் கூட சம்பளம் பெறுவாராக இருக்கலாம். இதனால், அவர் உண்மையில் பெறும் தொகை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

37
தீபிகா படுகோன் சம்பளம்:

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் தீபிகா படுகோன், ₹25 கோடி சம்பளத்தைப் பெற உள்ளார். இதுவரை பாலிவுட் படங்களில் அதிகபட்சமாக 20 கோடி சம்பளம் மட்டுமே பெற்று வந்த இவர், திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெறுவது, இவரது ஸ்டார் வால்யூவை வெளிப்படுத்தி உள்ளது.

47
ராஷ்மிகா மந்தனா சம்பளம்

இதுவரை , முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக மட்டுமே நடித்த ராஷ்மிகா மந்தனா, ‘ராக்கா’ படத்தில் வில்லியாக நடித்துள்ளாராம். அவரது சம்பளம் ₹8 கோடி வரை என தெரிய வருகிறது. இதனால் அவர், ஹீரோயின் என்பதை தாண்டி வில்லியாக மற்றொரு பரிமாணத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்த காத்திருக்கிறார்.

57
மிருணாள் தாகூர் சம்பளம்:

இவரை தொடர்ந்து, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள மற்றொரு ஹீரோயினாக மிருணாள் தாகூர், ரூபாய் 5 கோடி சம்பளம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

67
ஜான்வி சம்பளம்:

அதே போல் மூன்றாவது நாயகியாக நடிக்க இருக்கும் பிரபல நடிகை ஜான்வி கபூரும் சுமார் 5 கோடி வரை சம்பளமாக பெற உள்ளாராம். நடிகர்களின் சம்பளத்தை தவிர்த்து, தயாரிப்பு மற்றும் VFX பணிக்காக மட்டுமே படக்குழு ரூபாய் 200 முதல் 250 கோடி வரை செலவிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

77
அட்லீ சம்பளம்:

இறுதியாக இயக்குனர் அட்லீ 'ராக்கா ' படத்தை இயக்க ரூபாய் 25 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். மேலும் நடிகர் நடிகைகளின் சம்பளம், தயாரிப்பு செலவு, VFX செலவு உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து சுமார் 450 கோடிக்கும் மேல் இந்த படத்தின் பட்ஜெட் இருக்கும் என திரைப்பட வல்லுநர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories