2 மணி நேரத்தில் இளையராஜா செய்த தரமான சம்பவம்; 6 பாட்டுமே சூப்பர் ஹிட்! எந்த படம் தெரியுமா?

First Published | Jan 15, 2025, 4:25 PM IST

இசை ஞானி இளையராஜா தனது இசை வேகத்தால் பாலச்சந்தரை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். புன்னகை மன்னன் படத்திற்கான 6 பாடல்களையும் 2 மணி நேரத்தில் இசையமைத்துள்ளார். 

Punnagai Mannan Movie Songs Secret

இசை ஞானி, இசை கடவுள், இசை அரசன் என பல பெயர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. தனது இசையின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் இளையராஜா. 40 ஆண்டுகளாக இசை உலகை ஆட்சி செய்து வரும் இளையராஜாவின் பாடல்கல் தான் பலரின் ப்ளேலிஸ்டுகளை ஆக்கிரமித்துள்ளன. 

ஒருவேளை படம் நன்றாக இல்லை என்றாலும், இளையராஜாவின் இசைக்காவே பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. 1000 படங்களுக்கும் இளையராஜா இசையமைத்துள்ளார். அவர் எண்ணிலடங்கா ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். தலைமுறைகளை கடந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இளையராஜாவின் பாடல்களை கேட்காத நபர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 

Punnagai Mannan Movie Songs Secret

அவர் திறமையானவர் மட்டுமல்ல, மிக வேகமாக இசையமைக்க கூடியவர் . இயக்குனருக்கு என்ன தேவை என்பதை புரிந்து மிகவும் குறுகிய காலத்திலேயே இளையராஜா இசையமைத்து விடுவாராம். ஒரு வாரத்தில் 3 நாட்கள் படங்களுக்கு டியூன் போட்டு ரெக்கார்டிங் செய்தால், அடுத்த 3 நாட்கள் படத்திற்கு பின்னணி இசை அமைத்துவிடுவார். 

Tap to resize

Punnagai Mannan Movie Songs Secret

காலத்தால் அழியாத எத்தனையோ பாடல்களை இளையராஜா சில நிமிடங்களிலேயே இசையமைத்து கொடுத்தது தான். அப்படி மதிய உணவு இடைவேளையின் போது உணவு வர தாமதமானதால் இளையராஜா பி வாசுவை அழைத்து இசையமைத்து கொடுத்த படம் சின்னத்தம்பி. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.

Punnagai Mannan Movie Songs Secret

அந்த வகையில் தனது வேகத்தின் மூலம் பாலச்சந்தரை ஆச்சர்யப்படுத்தி உள்ளார் இளையராஜா. கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் படத்தின் கம்போசிங் பணி மதுரை ஆர்த்தி ஹோட்டலில் நடந்துள்ளது. அப்போது காலை 10 மணியளவில் படத்தில் எந்த சூழலில் பாட்டு வர வேண்டும் என்று இளையராஜாவிடம் கூறி விட்டு பாலச்சந்தர் மதுரையை சுற்றி பார்க்க சென்றுள்ளார். எப்படி 1 நாள் ஆகும் என்று நினைத்த பாலச்சந்தருக்கு 2 மணி நேரத்தில் இளையராஜாவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. 

Punnagai Mannan Movie Songs Secret

புன்னகை மன்னன் படத்திற்கு தேவையான 6 பாடல்களையும் இளையராஜா கம்போஸ் செய்து முடித்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பட்டி தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தற்போது கூட கேட்டு ரசிக்கும் வகையில் எவர்க்ரீன் ஹிட் பாடல்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!