'புன்னகை தேசம்' பட நடிகர் தருண் குமாரா இது? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே..!

Published : Jun 15, 2025, 08:38 AM IST

‘புன்னகை தேசம்’ படத்தில் நடித்த நடிகர் தருண் குமாரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

PREV
15
Punnagai Desam Actor Tarun Kumar

திரையுலகில் நடிக்க வரும் பலரும் ஒரு கட்டத்திற்கு மேல் காணாமல் போய்விடுகின்றனர் அல்லது திரைத்துறையில் இருந்து விலகி சொந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சில நடிகைகள் திருமணத்திற்குப் பின்னர் தனது கணவருடன் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிடுகின்றனர். அவர்களைப் பற்றி பெரிய அளவில் எந்த தகவலோ அல்லது புகைப்படமோ கிடைப்பது கிடையாது. ஆனால் சிறிய இடைவெளிக்கு பின்னர் அவர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தால் அது மிகப்பெரிய அளவில் வைரலாகிவிடும். அதுபோலத்தான் நடிகர் தருண் குமாரின் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

25
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தருண் குமார்

தருண் குமார், தெலுங்குத் திரையுலகில் பிரபலமான நடிகர் ஆவார். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது திரை வாழ்க்கையை ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கினார். மணிரத்னம் இயக்கிய அஞ்சலி (1990) படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தளபதி (1991), ஆதித்யா (1991) போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவரது தந்தை சக்கரபாணி ஒரு ஒரியா நடிகர் ஆவார். தாயார் ராஜராணி ஒரு தெலுங்கு நடிகை ஆவார்.

35
தமிழில் தருண் குமார் நடித்துள்ள படங்கள்

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகர் தருண் குமார் 2000 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான நூவ்வே காவலி (Nuvve Kavali) மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதையும் தருண் குமார் பெற்றார். தமிழில் இவர் ‘எனக்கு 20 உனக்கு 18’, ‘புன்னகை தேசம்’, ‘காதல் சுகமானது’, ‘இவன் யாரோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ‘புன்னகை தேசம்’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையைக் கொடுத்தது. ‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படத்தில் நடிகைகள் திரிஷா மற்றும் ஸ்ரேயா உடன் தருண்குமார் நடித்திருந்தார்.

45
திரைத்துறையில் ஏற்பட்ட இடைவெளி

தருண் குமாருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய ரசிகைகள் பட்டாளம் இருந்தது. பல ரசிகைகளின் கனவு கண்ணனாக வலம் வந்தார். சில காலம் திரைப்படங்களில் இருந்து இடைவெளி எடுத்திருந்த தருண், பின்னர் மீண்டும் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார். இருப்பினும் தருண்குமார் குழந்தை நட்சத்திரமாகவும், இளமைக்காலத்திலும் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவில்லை என்ற கருத்தும் பரவலாக உண்டு. 42 வயதாகும் அவர் தற்போது சில படங்களில் நடித்து வரும்போதும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிகளை பெற முடியவில்லை.

55
ஆளே மாறிப்போன தருண் குமார்

இந்த நிலையில் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்த பலரும், சாக்லேட் பாய் போல் இருந்த தருணா இப்படி மாறிவிட்டார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories