ரஜினிகாந்தை சூப்பர்ஸ்டாராக வெளிக்காட்டிய டாப் 5 சிறந்த படங்கள்!

Published : Jun 14, 2025, 11:59 PM IST

ரஜினியை சூப்பர்ஸ்டாராக வெளிக்காட்டிய டாப் 5 சிறந்த படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
17
ரஜினிகாந்தை சூப்பர்ஸ்டாராக வெளிக்காட்டிய டாப் 5 சிறந்த படங்கள்!

Rajinikanth Top 5 Evergreen Movies in Tamil : தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 170க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். எந்தளவிற்கு ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டினாரோ அதே அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மாஸ் காட்டியிருக்கிறார். ரஜினிகாந்த் நினைத்திருந்தால் மிகச்சிறந்த வில்லனாக மாறியிருப்பார். ஆனால், தமிழ் சினிமா அவரை வேறொரு கோணத்தில் பார்க்க விரும்பியதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராக உலகம் முழுவதும் திகழ்ந்தார்.

27
ரஜினிகாந்தை சூப்பர்ஸ்டாராக வெளிக்காட்டிய டாப் 5 சிறந்த படங்கள்!

ரஜினிகாந்த் நகைச்சுவை முதல் மெலோடி, டிராமா வரை பலவிதமான கதாபாத்திரங்களில் தன்னை வெளியில் காட்டிக் கொண்டார். உண்மையில் அவர் ஒரு சிறந்த நடிகர். எளிமையான மனிதரும் கூட.சினிமாவில் ஆரம்பகாலகட்டங்களில் ரஜினிகாந்த் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்தார். 1980ஆம் ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்புத் திறமையை பார்த்து வளர்ந்தவர்களுக்கு ரஜினிகாந்த் இன்னும் போற்றக் கூடிய கொண்டாடக் கூடிய ஒரு நடிகராகவே இருக்கிறார். அப்படி அவரை கொண்டாட காரணமாக இருந்த டாப் 10 படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்

37
16 வயதினிலே (1977):

ரஜினிகாந்தை எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து ஹிட் கொடுத்த படம் 16 வயதினிலே. இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் பரட்டை. இது இன்னும் கூடுதலாக ஒரு அடையாளத்தை கொடுத்தது. இந்தப் படத்தில் பரட்டையை (ரஜினிகாந்த்) தொடர்ந்து மயிலு கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி, சப்பானியாக கமல்ஹாசன் ஆகியோர் நடித்து அசத்தியிருந்தனர். இப்படி ஒரே படத்தில் மாஸ் நட்சத்திரங்கள் இடம் பெற்ற இந்தப் படம் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

47
முள்ளும் மலரும் (1978)

இந்தப் படமும் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி அவருக்கு முக்கிய படமாகவும் இந்தப் படம் இருந்தது. தனது சகோதரியை காதலிக்கும் சரத் பாபுவை வெறுக்கும் ஒரு கோபமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மட்டுமின்றி படத்தில் இடம் பெற்ற ராமன் ஆண்டாளும், செந்தாழும் பூவில் ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் கொடுத்தன.

57
ஜானி (1980)

ஜினியை இரட்டை வேடங்களில் காட்டிய படங்களில் இந்தப் படமும் ஒன்று. இந்தப் படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. அதில் இடம் பெற்ற பாடல் ஒன்று தான் ஆசையை காத்துல தூதுவிட்டு என்ற பாடல் தான். இந்தப் படத்தில் ஒரு ரஜினி திருடர் மற்றும் குற்றவாளி. இன்னொரு ரஜினி சலூன் கடையில் வேலை பார்ப்பவர். மேலும், ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. பிரபல புகழ்பெற்ற பாடகி. இவரது பாடலால் மயங்கி அவருக்கு ரசிகையாகி கடைசியில் அவரை காதலிக்கும் சூப்பர் ஹீரோ

67
தில்லு முல்லு

படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப வேலை செய்யும் இடத்தில் முதலாளியை ஏமாற்றக் கூடிய ஒரு அற்புதமான கதாபாத்திரம். பாலிவுட் படமான கோல்மால் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம். நகைச்சுவை கலந்த ஒரு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நடித்திருந்தார். தனது பெயரில் ஊர், அப்பாவின் பெயர் என்று முழுவதையும் சேர்த்து சொல்லும் விதம் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது. அதாவது ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் இதே போன்று ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் என்று வெவ்வேறு ரோல்களில் தனக்கு வேலை கொடுத்த முதலாளியை ஏமாற்றுவார்.

77
ஸ்ரீ ராகவேந்திரர்

இந்தப் படம் ரஜினிகாந்த் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இது அவரது தனிப்பட்ட விருப்பம். இயக்குநர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் உருவாகக்ப்பட்ட படம் தான் இந்தப் படம். வில்லன், காமெடி மற்றும் ஹீரோ என்று ஏராளமான கதாபாத்திரங்களில் நடித்த ரஜினிகாந்திற்கு ஸ்ரீ ராகவேந்திரர் ரோலில் நடிப்பது என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத படம். எந்த வித ஆக்‌ஷன் காட்சியும் இல்லாமல் பொறுமையாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories