Anirudh Kavya Maran Marriage Rumours in Tamil : அனிருத்தின் தனிப்பட்ட வாழ்க்கை அதாவது அவரது திருமணம் குறித்த வதந்திகள் ஆன்லைனில் பரவி வரும் நிலையில் இது குறித்து சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
Anirudh Kavya Maran Marriage Rumours in Tamil : தமிழ் சினிமாவில் இருக்கும் இசையமைப்பாளர்களில் அனிருத்தும் ஒருவர். இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ப பாடல்களை கொடுப்பதில் கில்லாடிக்கும் கில்லாடி. இதுவரையில் எத்தனையோ படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதே போன்று ஏராளமான பாடல்களும் பாடியுள்ளார். சினிமாவையும் தாண்டி அடிக்கடி சர்ச்சையிலும் அடிபட்டு வருகிறார். ஏற்கனவே ஆண்ட்ரியா உடனான காதல் வதந்திகளில் சிக்கியிருந்த அனிருத் இப்போது திருமணம் தொடர்பான வதந்திகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்.
26
காவ்யா மாறன் கல்யாணம்
கடந்த சில நாட்களாக அனிருத்தின் திருமணம் தொடர்பான வதந்திகள் ஆன்லைனில் பரவி வருகிறது. அதுவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் துணை உரிமையாளரான காவ்யா மாறனுக்கும், அனிருத்தும் இடையில் திருமணம் என்பது போன்று வதந்திகள் பகிரப்பட்டு வந்துள்ளது. இதற்கு காரணம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக அனிருத் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
36
அனிருத் திருமணம்
இதில் அனிருத் மற்றும் காவ்யா மாறன் இருவருக்கும் இடையில் நட்பிருக்கும் நிலையில் இப்போது இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக ஆன்லைனில் வதந்தி பரவி வருகிறது. இது வதந்தி என்று எல்லோரும் அறிந்த நிலையிலும் கூட இதைப் பற்றி அனிருத் விளக்கம் அளித்துள்ளார். தற்போது 34 வயதாகும் அனிருத் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த சூழலில் காவ்யா மாறன் உடன் திருமணம் குறித்து வதந்தி பகிரப்பட்டிருக்கிறது.
46
காவ்யா மாறன் – அனிருத் திருமணம்
இதற்கு தான் அனிருத் இப்போது விளக்கம் அளித்திருக்கிறார். இது குறித்து அனிருத் கூறியிருப்பதாவது: கல்யாணமா? கொஞ்சம் கூலா இருங்க, தயவு செய்து வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அனிருத் விளக்கம் கொடுத்த நிலையில் காவ்யா மாறன் இதைப் பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
56
வதந்திக்கு பதிலடி கொடுத்த அனிருத்!
கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான வேட்டையன் படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். தற்போது கிங்டம், மேஜிக் மற்றும் தி பேரடைஸ் ஆகிய தெலுங்கு படங்களுக்கும், கூலி, மதராஸி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2 ஆகிய தமிழ் படங்களுக்கும், கிங் என்ற ஹிந்தி படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
66
என்னது கல்யாணமா? கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? வதந்திக்கு பதிலடி கொடுத்த அனிருத்!
அனிருத் தனது ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தது ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் சம்பளம் பெறுகிறார். அதுமட்டுமின்றி படம் ஹிட் கொடுத்தால் தயாரிப்பாளர் சார்பில் கார் உள்ளிட்ட விலையர்ந்த பொருட்கள் பரிசாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு கலாநிதி மாறன் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.