Dhanush Kuberaa Trailer : தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் குபேரா படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருந்த நிலையில் அது நாளை 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Kuberaa Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் நடிகர் தனுஷ். தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்றிருந்தாலும் சினிமா மீதான காதல் அவரை அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான ராயன் படத்திற்கு பிறகு தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் குபேரா படம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
28
குபேரா பட இயக்குநர் சேகர் கம்முலா
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் குபேரா. ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 193 நிமிடங்கள். அதாவது 3 மணி நேரம் 13 நிமிடங்கள் ஆகும். தமிழ் சினிமாவில் அதிக ரன்னிங் டைம் கொண்ட படமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
38
குபேரா டிரைலர் தள்ளி போக காரணம்
இந்த நிலையில் தான் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி நாளை 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
48
குபேரா
இதில் ஒருவர் மட்டுமே காயத்துடன் தப்பிய நிலையில் மற்ற அனைவரும் பரிதாமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது. அதோடு அருகிலுள்ள கட்டிடத்தின் மீது மோதவே, அங்கு தங்கியிருந்த 20 மருத்துவர்கள் உள்பட பலரும் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வந்தனர்.
58
குபேரா டிரைலர் எப்போது ரிலீஸ்
இந்த நிலையில் தான் இதன் காரணமாகத்தான் குபேரா பட தயாரிப்பாளர் தனது பட விழாவை ரத்து செய்துள்ளார். இந்த விழாவிற்காக முக்கிய பிரபலங்களை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், எதிர்பாராத விபத்து குபேரா டிரைலரை ரத்து செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
68
தனுஷ் மற்றும் நாகர்ஜூனா
அதோடு குபேரா டிரைலர் நேரடியாக ஆன்லைனில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் நாளை 15ஆம் தேதி வெளியாகிறது. படத்தை அவசர அவசரமாக வெளியிட அமேசான் நிறுவனம் கொடுத்த நெருக்கடி தான் காரணமாக சொல்லப்படுகிறது. இதையெல்லாம் மீறி தனுஷிற்கு குபேரா படம் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
78
குபேரா 20ஆம் தேதி ரிலீஸ்
சமீபகாலமாக தமிழ் சினிமா நடிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமா நடிகர்கள் இணைந்து நடித்து வருவது வாடிக்கையாக வருகிறது. தளபதி படத்தில் ரஜினிகாந்த் மம்மூட்டி நடித்த நிலையில், ஜில்லா படத்தில் விஜய் மற்றும் மோகன் லால் இணைந்து நடித்தனர். இதே போன்று ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் மோகன்லால், ஷிவராஜ்குமார் என்று நட்சத்திரங்கள் நடித்தனர். இப்போது குபேரா படத்தில் தனுஷ் மற்றும் நாகர்ஜூனா இணைந்து நடித்துள்ளனர்.
88
குபேரா டிரைலர்
இதற்கு முன்னதாக கார்த்தி மற்றும் நாகர்ஜூனா இணைந்து தோழா படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.