சினிமா பிரபலங்களுக்கு அங்கீகாரமாக திகழ்வது விருதுகள் தான். அதிலும் இந்திய திரைபிரபலங்கள் பலரும் வாங்க விரும்பும் ஒரு விருது என்றால் அது மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருது தான். இப்படிப்பட்ட மதிப்புமிக்க இந்த தேசிய விருதை ஒருதடவை கூட வாங்காத ஜாம்பவான்களும் இருக்கிறார்கள். குறிப்பாக கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இதுவரை ஒரு தேசிய விருது கூட வாங்கியதில்லை.
இதே நிலை தான் பெரும்பாலான தமிழ் சினிமா இசையமைப்பாளர்களுக்கும் உள்ளது. யுவன் சங்கர் ராஜா, அனிருத், வித்யாசாகர் போன்ற திறமை வாய்ந்த இசையமைப்பாளர்களே நூலிழையில் தேசிய விருது வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர். இதுவரை தமிழ் சினிமாவில் இருந்து அதிக தேசிய விருது வாங்கிய இசையமைப்பாளர்கள் இரண்டே பேர் தான். ஒன்று இளையராஜா, மற்றொன்று ஏ.ஆர்.ரகுமான்.
24
இளையராஜா vs ஏ.ஆர்.ரகுமான்
இளையராஜா இதுவரை 5 முறையும் ஏ.ஆர்.ரகுமான் இதுவரை 7 முறையும் தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்கள். இதில் ஏ.ஆர்.ரகுமான் வாங்கிய முதல் தேசிய விருதுக்கு பின்னணியில் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமான படம் ரோஜா. இப்படத்தை மணிரத்னம் இயக்கினார். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. அதுவரை இளையராஜாவை மட்டுமே நம்பி இருந்த கோலிவுட் இயக்குனர்களுக்கு ரோஜா படம் மூலம் புது ரூட்டை போட்டுக் கொடுத்தார் ஏ.ஆர்.ரகுமான்.
34
தேசிய விருதுக்காக ரகுமானுடன் போட்டிபோட்ட இளையராஜா
ரோஜா படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் தேசிய விருது பரிந்துரையில் இடம்பெற்றிருந்த அதே சமயத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த கல்ட் கிளாசிக் திரைப்படமான தேவர்மகனும் போட்டியில் இருந்தது. இரண்டு படங்களின் இசையுமே ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டன. இதனால் யாருக்கு தேசிய விருது வழங்குவது என்பதை முடிவு செய்யும் பொறுப்பில் இருந்த ஜூரிக்களே குழம்பிப் போய் இருந்தனர்.
இதில் ஜூரிக்கள் இரண்டு படங்களுக்குமே தலா 6 வாக்குகளை செலுத்தி இருந்தார்களாம். இறுதியாக வெற்றியாளரை தீர்மானிக்கும் ஒரு வாக்கை அப்போதைய ஜூரி மெம்பராக இருந்த பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் அந்த ஒரு வாக்கை அவர் ஏ.ஆர்.ரகுமானுக்கு போட்டதால், ஒரு ஓட்டில் தேசிய விருதை தவறவிட்டார் இளையராஜா. இந்த தகவலை பாலுமகேந்திரா பழைய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.