Trisha : 6 மாதத்தில் 3 பிளாப் படங்கள்; திரிஷாவை துரத்தும் தோல்விகள்! அச்சச்சோ அடுத்தது இந்த படமா?

Published : Jun 14, 2025, 01:24 PM IST

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான திரிஷா, இந்த ஆண்டு மட்டும் 3 தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார்.

PREV
14
Trisha Flop Movies

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 42 வயது ஆனாலும் இன்னும் இளமை மாறாமல் 20 வயது பெண் போலவே காட்சியளிக்கிறார். இதனால் திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டில் கடந்த 6 மாதங்களில் நடிகை திரிஷா நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளியாகிவிட்டது. அதில் குட் பேட் அக்லி தவிர மற்ற மூன்று படங்களும் மிகப்பெரிய தோல்வி படங்களாகும்.

24
3 தோல்விகளை சந்தித்த திரிஷா

அதில் முதல் படம் ஐடெண்டிட்டி. மலையாள படமான இதில் நடிகர் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா. இப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆனது. சஸ்பென்ஸ் திரில்லர் படமான இது ரசிகர்களை பெரிதளவில் கவரவில்லை. இதனால் ஐடெண்டிட்டி தோல்வியை தழுவியது. அடுத்ததாக அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து அட்டர் பிளாப் ஆனது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார்.

34
தக் லைஃப் படத்தால் திரிஷா கடும் அப்செட்

இதையடுத்து திரிஷாவின் மூன்றாவது தோல்வி படமாக தக் லைஃப் அமைந்தது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசனின் கள்ளக் காதலியாக நடித்திருந்தார் திரிஷா. அவரின் கதாபாத்திரம் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. அதுமட்டுமின்றி இப்படத்தில் திரிஷா நடித்த ஏராளமான காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனால் நடிகை திரிஷா கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்திலேயே திரையரங்குகளில் கூட்டமின்றி காத்துவாங்கி வருகிறது.

44
திரிஷாவின் அடுத்த படம் என்ன?

ஆறு மாதத்தில் மூன்று தோல்விகளை சந்தித்த திரிஷா, அடுத்ததாக சூர்யா 45 திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. சூர்யாவும் கங்குவா, ரெட்ரோ என அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறார். இதனால் இருவருமே சூர்யா 45 திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories