Puneeth Rajkumar Death: நீங்க தான் ரியல் ஹீரோ... புனீத் ராஜ்குமார் செய்து வரும் உதவிகள் கொஞ்சம் நஞ்சமா?

First Published | Oct 29, 2021, 8:23 PM IST

புனீத் ராஜ்குமார் (Puneeth Rajkumar) அடுக்கடுக்காக மக்களுக்கு செய்து வரும் உதவிகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்த்து பலர் நீங்கள் தான் ரியல் ஹீரோ என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

கல்வி அனைத்து ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் சுமார்  48 இலவச பள்ளிக்கூடங்கள் பெங்களூரில் கட்டி கொடுத்துள்ளார்.

குடும்பங்களால் ஒதுக்கப்பட்டு, தெருக்களில் எவ்வித ஆதரவும், அரவணைப்பும் இல்லாமல் இருப்பவர்களை பாதுகாக்க 26 ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்தி வருகிறார்.

Tap to resize

பெற்றோர்கள் மூலம் கைவிடப்பட்ட வயதான பெற்றோரை பாதுகாப்பதற்காக, சுமார்16 முதியோர் இல்லங்களை கட்டி மக்கள் மனதில் நிலைத்துள்ளார்.

Puneeth

மேலும் பெற்றோர் இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் சுமார் 1800 மாணவ மாணவியரின் கல்வி செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார்.

தன் வருமானத்தை தனக்காக மட்டுமில்லாமல் மக்கள் பயன் பெரும் விதத்தில் பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார் கன்னட திரையுலகின் மன்னன் புனித் ராஜ்குமார் .

இன்று தன் மரணத்திலும் தன் கண்களை தானமாக வழங்கி பார்வையற்ற ஓர் பாமரனின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். இவரது மரண செய்தியை கேட்டு பல பிரபலங்கள் கனத்த இதயத்துடன் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!