ஒரு ஜாடையில் டாப்ஸி... ஒரு ஜாடையில் மாளவிகா மோகனன்!! ஹீரோயினாகும் கிரிக்கெட் வீரர் சகோதரின் கவர்ச்சி அலப்பறை!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் (Deepak Chahar) சகோதரி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இவரது லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் புது முக நாயகிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில், தற்போது கிரிக்கெட் வீரரின் சகோதரி ஒருவர், அதுவும் நயன்தாராவின் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

சிஎஸ்கே அணிக்காக விளையாடிய தீபக் சாஹர்  சிறந்த பவுலராக கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இவரது பந்து வீச்சு சிஎஸ்கே அணிக்கு முக்கிய பங்காற்றியதும் குறிப்பிடத்தக்கது.


இவரை தொடர்ந்து இவரது சகோதரர், ராகுல் சாஹர் மும்பை அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். இப்படி அண்ணன் - தம்பி இருவருமே கிரிக்கெட் வீரர்களாக இருக்கும் நிலையில், இவர்களது சகோதரி தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

 சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், தற்போது தமிழ் படத்தில் அறிமுகமானாலும்... ஏற்கனவே சில குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

2014ம் ஆண்டுக்கான பெமினா அழகுப் போட்டியில் கலந்து கொண்டுள்ள இவர், பெமினா மிஸ் போட்டோஜெனிக் மற்றும் மிஸ் சொடுக்கு ஆகிய பட்டங்களை வென்றவர் மல்டி சாஹர்.

அதே போல், பள்ளி - கல்லூரி காலங்களில் ஹை ஜம்ப், ஷார்ட் புட் போன்ற விளையாட்டுகளில் கெத்து காட்டி, விளையாட்டு வீராங்கனையாகவும் பார்க்கப்பட்டவர்.

பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் டாப்ஸி போலவும், மற்றொரு ஜாடையில் மாளவிகா மோகனன் போலவும் இருக்கும் அழகு தான் இவரை தற்போது திரைப்பட நடிகையாக மாற்றியுள்ளார்.

மல்டி சஹாருக்கு பாகுபலி இயக்குனர் ராஜ மௌலி போன்ற இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் முதல் வாய்ப்பே, இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் உருவாகும் 'வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்' படம் மூலம் தான் நாயகியாக மாறியுள்ளார்.

எப்போதும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மல்டி சஹார்  எப்படியும் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இளம் நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுப்பர் என்பது இவரது கவர்ச்சியை பார்த்தாலே தெரிகிறது.

Latest Videos

click me!