தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இதையடுத்து அரசியலிலும் கொடிகட்டி பறந்த இவர் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். விஜயகாந்த் என்று சொன்னால் பெரும்பாலும், அவர் செய்த நல்ல செயல்களைப் பற்றி தான் சினிமா பிரபலங்கள் பேசுவார்கள். அந்த அளவுக்கு நல்ல குணமுடைய மனிதராகவே இருந்து வந்துள்ளார் விஜயகாந்த்.
இப்படிப்பட்ட விஜயகாந்த் ஒரு படத்திற்காக தயாரிப்பாளரின் வீட்டை எழுதிய வாங்கிய அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. பாலாவின் பிதாமகன் படத்தை தயாரித்தவர் விஏ துரை. இவர் விஜயகாந்த் நடித்த கஜேந்திரா என்கிற படத்தையும் தயாரித்துள்ளார். இப்படம் ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆனது. இதனால் தயாரிப்பாளர் விஏ துரைக்கு கடும் நஷ்டமும் ஏற்பட்டு உள்ளது.
இவர் தனது சிகிச்சைக்கு பணமில்லை என்றுகூறி சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதையடுத்து நடிகர் சூர்யா அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்து உதவினார். பல்வேறு நடிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு தொடர்ந்து உதவி வருகின்றனர். குறிப்பாக விஏ துரையின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டதும் நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு போன் போட்டு பேசினாராம்.