Mahalakshmi : தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை மகாலட்சுமி, சீரியலில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கியவர் விஜே மகாலட்சுமி. பேமஸான விஜே-வாக வலம் வந்த இவரும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் சின்னத்திரை பக்கம் சென்ற அவர் வாணி ராணி, செல்லமே, அரசி என நடிகை ராதிகா தயாரித்த சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
24
தொடர்ந்து சில சீரியல்களில் வில்லியாக நடித்த மகாலட்சுமி அனில் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும் இருக்கும் நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அனிலை விவாகரத்து செய்து பிரிந்தார் மகாலட்சுமி. இதையடுத்து தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தர் மீது காதல் வயப்பட்டார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த செப்டம்பர் 1-ந் தேதி திருப்பதியில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் எளிமையாக நடத்தி உள்ளனர். இவர்களது திருமணத்தை பற்றிய பேச்சு கடந்த ஒரு வாரமாக சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது.
44
இந்நிலையில், நடிகை மகாலட்சுமியின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பல ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வரும் இவர் ஒரு மாதத்திற்கு ரூ.3 லட்சம் சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சீரியல்களில் நடிக்க அவர் வாங்கும் சம்பளமாகும், இதுதவிர படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். அதற்கு எவ்வளவு வாங்குகிறார் என்கிற விவரம் வெளியாகவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.