கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் தனுஷ், தற்போது பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிரபலமான நடிகர் ஆகிவிட்டார். கடந்த ஓராண்டாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகி வந்த நிலையில், சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மூலம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதால், அவர் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது வாத்தி, நானே வருவேன், கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் வாத்தி, நானே வருவேன் ஆகிய படங்கள் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... நீயா நானா-வில் படிக்காத கணவனை ஏளனமாக பேசிய மனைவிக்கு ஆதரவாக குரல்கொடுத்த பிரபல கவிஞர்
இதில் வாத்தி படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ், டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதேபோல் நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 29-ந் தேதி ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், சைலண்டாக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி டுவிட்டரில் அதிக பாலோவர்களை கொண்ட கோலிவுட் நடிகர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அவரை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக உள்ள நடிகர் என்றால் அது சூர்யா தான், அவரை 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த லிஸ்டில் கமல், ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... பைக் ரைடிங்கின் போது... புத்தர் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்து வழிபாடு செய்த அஜித் - வைரலாகும் வீடியோ