"நான் வேட்டையன் படம் பற்றி தப்பா பேசல; அது ஒரு ஹிந்தி படம்" - கங்குவா தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!

First Published | Oct 15, 2024, 9:18 PM IST

KE Gnanavel Raja : பிரபல தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா, சமூக வலைத்தளங்களில் தான் வெளியிட்ட கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

KE Gnanavel Raja

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகி உலக அளவில் சுமார் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியுள்ளது வேட்டையன். முதல் முறையாக பிரபல இயக்குனர் டிஜே ஞானவேலுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமிதாப்பச்சன், பாஹத் பாசில் உள்பட பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தது இப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறது. மேலும் வேட்டையன் வெளியாக வேண்டிய அதே தேதியில் வெளியாக இருந்த கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது நாம் அறிந்ததே.

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை! வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டை விட்டு குடும்பத்தோடு வெளியேறிய நடிகர்!

Vettaiyan Vs Kanguva

ஏற்கனவே கங்குவா திரைப்படமும், வேட்டையன் திரைப்படமும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகி நேருக்கு நேர் மோத உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. இந்த சூழலில் நான் தனது தம்பி கார்த்தியின் "மெய்யழகன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாம் சிறுவர்களாக இருந்த பொழுதே தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்தவர். 50 ஆண்டு காலமாக தமிழ் திரை உலகை ஆண்டு வரும் ஒருவருடைய திரைப்படத்தோடு இணைந்து நம்முடைய திரைப்படம் வெளியாவது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது". 

ஆகையால் அந்த தேதியில் இருந்து கங்குவா திரைப்படம் விளக்குவதாகவும், விரைவில் அந்த திரைப்படம் வெளியாகும். அதிகாரப்பூர்வமான நாள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இதே கருத்தை தான் வழிமொழிந்து பேசியிருந்தார் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.இ ஞானவேல் ராஜா. மேலும் கங்குவா திரைப்படம் பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பு என்பதால், அப்படம் தனியே வெளியாவது தான் நன்றாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

Latest Videos


Vettaiyan

இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது வேட்டையன் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து தன்னுடைய சமூக ஊடக கணக்கில் தன்னுடைய ரசிகர்களோடு பேசிக் கொண்டிருந்த கே.இ ஞானவேல் ராஜா, ஒரு தகவலினை வெளியிட்டு இருந்தார். அதாவது அண்மையில் ஒரு திரைப்படம் வெளியானது, அந்த திரைப்படத்தில் பெரிய பெரிய நடிகர்கள் நடித்திருந்தார்கள், பெரிய அளவில் அப்பட நிறுவனம் அதை பிரமோஷனும் செய்தது. ஆனால் இப்பொழுது அந்த திரைப்படம் சரியாக ஓடவில்லை என்று பேசி இருந்தார். 

இந்த சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் குறித்து தான் ஞானவேல் ராஜா அவ்வாறு பேசியதாக சில தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அது குறித்து ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த ஞானவேல் ராஜாவிடம் கேள்வி கேட்கப்பட்ட பொழுது, அதற்கு பின்வருமாறு பதில் அளித்து இருந்தார்..

Studio Green Gnanavel

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் நான், அவருடைய திரைப்படத்தைப் பற்றி நான் ஏன் பேசப் போகிறேன். அது கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான Khel Khel Mein என்கின்ற ஹிந்தி திரைப்படத்தை பற்றி தான் நான் பேசி இருந்தேன். அது மட்டுமல்லாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேட்டையன் திரைப்படம் வெளியான பொழுது அதீத மழை பெய்தது நினைத்து நானும் பெரிய அளவில் வருத்தப்பட்டேன். ஆகவே நான் வேட்டையன் திரைப்படம் குறித்து எந்த வித தவறான கருத்துக்களையும் பேசவில்லை. மாறாக அந்த ஹிந்தி திரைப்படத்தை சுட்டிக்காட்டி தான் பேசினேன். இதில் எந்த தவறும் இல்லை என்று தன்னுடைய தரப்பு நியாயத்தை முன்வைத்திருக்கிறார்.

ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட ஜூனியர் NTR-யின் 'தேவாரா'! எப்போது ரிலீஸ் தெரியுமா?

click me!