ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட ஜூனியர் NTR-யின் 'தேவாரா'! எப்போது ரிலீஸ் தெரியுமா?

First Published | Oct 15, 2024, 6:43 PM IST

ஜூனியர் NTR நடிப்பில் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியான 'தேவாரா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
 

Devara Movie OTT Release Update

என்.டி.ஆர் - கொரட்டால சிவா கூட்டணியில் வெளிவந்த 'ஜனதா கேரேஜ்' போன்ற சூப்பர் ஹிட் படத்திற்குப் பிறகு, இவர்கள் இருவரும் மீண்டும் கைகோர்த்த திரைப்படம் 'தேவரா'.  ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு என்.டி.ஆர் (NTR) தனி நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் (Janhvi Kapoor) ஹீரோயினாக நடித்திருந்தார். இதுவரை பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஜான்விக்கு இந்த படம், முதல் தென்னிந்திய திரைப்படமாக அமைந்தது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும், தொடர்ந்து கலவையான விமர்சனங்களே இப்படத்திற்கு கிடைத்தது. எனினும் தசரா விடுமுறை நாட்களில் இந்தப் படம் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வெளியான மூன்றே வாரங்களில் வசூல் டல்லடிக்க துவங்கிவிட்டதால்... தற்போது இந்த படத்தை ஓடிடிக்கு பார்சல் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. 

Jr NTR and Janhvi kapoor movie

ஜூனியர் என்டிஆரின், தேவாரா திரைப்படம்... வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைத்தது. முன்பதிவில் சாதனை படைத்த இப்படம் வெளியான பிறகும் அதன் வசூல் வேட்டையைத் தொடர்ந்தது. இதுவரை ரூ.510 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

கூடிய விரைவில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று இயக்குனர் சமீபத்தில் கூறினார். முதல் பாகத்தில் நீங்கள் பார்த்தது 10 சதவீதம் மட்டுமே, என்றும் இரண்டாம் பாகத்தில் 100 சதவீதம் பார்ப்பீர்கள் என்றார்.

அரபிக் இதிகாசத்தில் உள்ள காதலின் 7 நிலையை ஒரே பாட்டில் கூறிய வைரமுத்து!

Tap to resize

ntr, devara2, koratala shiva

 'தேவரா' படம் வெளியாகி 18 நாட்களே நிறைவடைந்துள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானாவில் தினமும் ஒரு கோடி ரூபாய் வசூலித்ததாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவிட் காலத்திற்குப் பிறகு இந்த அளவுக்கு வசூல் செய்த படம் 'தேவரா' மட்டும் தான் என கூறப்படுகிறது. 

இதுவரை ராஜமௌலியின் படங்கள் மட்டுமே இவ்வளவு பெரிய அளவில் வசூல் செய்துள்ளன. இப்போது அவரைத் தவிர வேறொரு இயக்குனரின் படம் இந்த அளவுக்கு வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறை.

Ott Release Date in Devara movie

இந்நிலையில் 'தேவரா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இந்தப் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் (Netflix) பெற்றுள்ளது. தெலுங்கு மீடியாக்களில் வலம் வரும் தகவலின்படி, இந்தப் படம் நவம்பர் மூன்றாவது வாரத்தில், நவம்பர் 22 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஓடிடியிலும் இந்தப் படம் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானா மற்றும் ஆந்திராவை தவிர பாலிவுட்டில், ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் படம் முதல்... தளபதிக்கு ஜோடியாகும் வாய்ப்பு வரை 5 படங்களை மிஸ் செய்த சாய் பல்லவி!

Latest Videos

click me!