Gnanavel Raja
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் திகழ்ந்து வருகிறது. வருகின்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி உலக அளவில் 38 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழில் சூர்யாவின் குரலை AI தொழில்நுட்பம் மூலம் மற்ற 37 மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து, திரைப்படத்தை வெளியிடப் பட குழு முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே அதற்கான பணிகளும் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேல் மெகா பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்த திரைப்படம் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sundari Serial Actress: போதைப்பொருள் கடத்தல்! சென்னை மாலில் கையும் களவுமாக சிக்கிய பிரபல சீரியல் நடிகை!
Kanguva
முதலில் இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே தேதியில் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "வேட்டையன்" திரைப்படமும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தது. இந்த சூழலில் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் என்கின்ற நிலையிலிருந்து, தாங்கள் பின் வாங்குவதாக அதிகாரப்பூர்வமாக கங்குவா பட குழு அறிவித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பவர் நாம் சிறுவயதில் இருந்தபோதே தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்தவர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆண்டு வரும் ஒரு மனிதனுடைய திரைப்படத்தோடு நம்முடைய திரைப்படம் வெளியாவது ஏற்புடையதாக இருக்காது, என்று நடிகர் சூர்யா வெளிப்படையாகவே கூறினார்.
மேலும் இந்த முடிவிற்கு தன்னுடைய நன்றிகளை தெரிவிப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கங்குவா திரைப்படம் தீபாவளி திருநாளுக்கு வெளியாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு எழுந்தது.
Disha Patani
ஆனால் தீபாவளி திருநாளுக்கு சிவகார்த்திகேயனின் "அமரன்", கவினின் "பிளடி பெக்கர்", ஜெயம் ரவியின் "பிரதர்" மற்றும் துல்கர் சல்மானின் "லக்கி பாஸ்கர்" உள்ளிட்ட திரைப்படங்களும் வெளியாக இருந்த நிலையில், அந்த தேதியில் இருந்து விலகி நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் கங்குவா திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் ஏன் தீபாவளி திருநாள் அன்று கங்குவா திரைப்படம் வெளியாகவில்லை என்கின்ற புள்ளி விவரத்தை தற்பொழுது அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளியிட்டுள்ளார்.
Studio Green
அவர் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறிய தகவலின் படி "தீபாவளி திருநாளன்று நாங்கள் கங்குவா திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு இருந்தால் நான்காயிரம் முதல் 5000 திரையரங்குகள் மட்டுமே எங்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் அதிலிருந்து விலகி தனியாக இப்போது நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படத்தை வெளியிடுவதால், தற்பொழுது 11,500 திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இது எங்களுக்கு ஒரு மிகசிறந்த வாய்ப்பு என்று புள்ளி விவரத்தோடு தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார் அவர்.
ஒரே வருடம்; அடுத்தடுத்து 4 சில்வர் ஜூப்ளி ஹிட் படங்களை கொடுத்த தமிழ் நடிகர் - யார் அவர் தெரியுமா?