Sundari Serial Actress: போதைப்பொருள் கடத்தல்! சென்னை மாலில் கையும் களவுமாக சிக்கிய பிரபல சீரியல் நடிகை!

Published : Nov 09, 2024, 05:05 PM ISTUpdated : Nov 09, 2024, 05:28 PM IST

Sundari Serial Actress: சன் டிவியின் 'சுந்தரி' சீரியல் நடிகை 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

PREV
14
Sundari Serial Actress: போதைப்பொருள் கடத்தல்! சென்னை மாலில் கையும் களவுமாக சிக்கிய பிரபல சீரியல் நடிகை!
Drugs

தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்தால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீரழிவதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியில் அவ்வப்போது திடீர் சோதனைகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சுற்றியுள்ள வீடுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை நடைபெற்றது. 

24
Chennai Crime News

மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் அவ்வப்போது கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னை கொடூங்கையூரில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் ஒருவர் வேதியியல் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர். இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சீரியல் நடிகை கைது செய்யப்பட்டுள்ளனர். 

34
Sundari Serial Actress Meena

சன் டிவி.யில் தினமும் 7 மணிக்கு ஒளிபரப்படும் சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் நடிகை மீனா. இவர் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இவர் ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் போதை பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

44
women arrested

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மீனாவிடம் சோதனையிட்ட போது அவரிடம் 5 கிராம் மெத்தபெட்டமைன் எனும் அதிக வீரியம் கொண்ட போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

click me!

Recommended Stories