2025 ஆம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று தான் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி'. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரேபா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், மோனிஷா பிளெஸி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
அமீர் கான் மற்றும் பூஜா ஹெக்டே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்:
மேலும், அமீர் கான் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். இந்த தகவலை கடந்த மாதம் தான் படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்தது. இதற்கு முன்னதாக ரஜினி நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்த நிலையில், இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே அந்த வாய்ப்பை பெற்று டான்ஸ் ஆடியிருக்கிறார்.
35
லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புகைப்படங்கள்:
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.300 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் மற்றும் பேங்காக் ஆகிய பகுதிகளில் எல்லாம் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் தொடர்பான முக்கியமான காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையேடு ரஜினிகாந்த், 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். ஏற்கனவே ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
55
ஆகஸ்ட் 14ஆம் தேதி வார் 2 வெளியாக உள்ளது:
இந்த நிலையில் தான் கூலி திரைப்படம் வரும் ஆகஸ்டர் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஆகஸ்ட் 14ஆம் தேதி ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள வார் 2 படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து அனில் கபூர், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ரூ.200 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், யாஷ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி வார் 2 படம் வெளியாகும் நிலையில் ரஜினிகாந்தின் கூலி படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.