புஷ்பா 3 ஷூட்டிங் எப்போது? தயாரிப்பாளர் சொன்ன குட் நியூஸ்!!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் ஹிட் ஆன நிலையில், அதன் 3ம் பாகம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் வெளியிட்டு இருக்கிறார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் ஹிட் ஆன நிலையில், அதன் 3ம் பாகம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் வெளியிட்டு இருக்கிறார்.
Pushpa 3 Update: Producer Shares Exciting News About Allu Arjun's Upcoming Film! 'புஷ்பா 2: தி ரூல்' படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்த படத்தோட 3வது பாகத்துக்காக மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனா லேட்டஸ்ட் தகவல்களின் படி, புஷ்பா 3 படத்திற்காக ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ண வேண்டியிருக்கும். ஏனெனில் அல்லு அர்ஜுன் 'Pushpa 3: The Rampage' படத்துக்கு முன் 2 பெரிய படங்கள்ல நடிக்க இருக்கிறார். அதில் ஒரு படம் ரூ.1100 கோடி வசூல் செய்த ஷாருக் கானின் 'ஜவான்' படத்தை இயக்கிய அட்லீ குமாரின் படம். மற்றொரு படத்தை இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடித்த 'ஜுலாய்' (2012), 'சன் ஆஃப் சத்யமூர்த்தி' (2015) மற்றும் 'அலா வைகுண்டபுரம்முலு' (2020) போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.
சமீபத்தில் நிதின் மற்றும் ஸ்ரீலீலா நடித்த 'ராபின்ஹுட்' என்கிற தெலுங்கு படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. 'புஷ்பா 2' படத்தை தயாரித்த மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளனர். இந்த பிரஸ் மீட்டில் தயாரிப்பாளர் ரவி சங்கர் (Y. Ravi Shankar) அல்லு அர்ஜுனோட அடுத்து வரப்போற படங்கள் பற்றி பேசி இருந்தார். அதன்படி அல்லு அர்ஜுன் அட்லீயின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ஒய். ரவி சங்கர் உறுதிப்படுத்தினார். இதற்கு முன் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ படம் பத்தி வெறும் வதந்திகள்தான் வந்தது. தற்போது முதன்முறையாக அவர்கள் படம் பற்றி அதிகாரப்பூர்வமாக பேசப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்... புஷ்பா 2 கலெக்ஷன்ஸ் குறித்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
இதுபற்றி ஒய். ரவி சங்கர் பேசும்போது, அல்லு அர்ஜுன் அட்லீ படத்த முடிச்சதுக்கு அப்புறம் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் படத்துல நடிப்பார் என சொன்னார். அட்லீ மற்றும் திரிவிக்ரம் படங்களில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு ரெண்டு வருஷம் ஆகும் என அவர் கூறினார். அதுமட்டுமின்றி, 'புஷ்பா 2' இயக்குனர் சுகுமார் இந்த கேப்பில் ராம் சரணின் அடுத்த பட வேலைகளில் பிஸியா இருப்பார் என கூறினார். அல்லு அர்ஜுனும், சுகுமாரும் அவங்க கைவசம் உள்ள படங்களை முடித்த பின்னர் தான் 'புஷ்பா 3'க்காக ஒன்றாக சேருவார்களாம். 2027ல் புஷ்பா 3 பட ஷூட்டிங் ஆரம்பிச்சு 2028ல் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'புஷ்பா' சீரிஸ்ல முதல் படம் 'புஷ்பா: தி ரைஸ்' 2021ல் ரிலீஸ் ஆச்சு. இது உலகம் முழுக்க 350 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படத்தின் இரண்டாவது பாகம் 2024ல் 'புஷ்பா 2: தி ரூல்' என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது, இது உலகம் முழுக்க 1800 கோடி ரூபாய்க்கு மேல வசூல் செய்தது. இரண்டு பாகங்களும் ஹிட் ஆனதால் அதன் மூன்றாவது பாகமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 3 படத்தில் விஜய் தேவரகொண்டா வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... புஷ்பா படம் பார்த்து என் ஸ்கூல்ல பாதி பசங்க கெட்டுப் போயிட்டாங்க - டீச்சர் ஆதங்கம்