திருமணத்துக்கு நோ சொன்ன சிம்பு பட ஹீரோயின்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Published : Mar 17, 2025, 11:24 AM ISTUpdated : Mar 17, 2025, 12:38 PM IST

18 வயதில் ஹீரோயினாக அறிமுகமாகி, தற்போது  தன்னுடைய  அழகை பொத்தி பாதுகாத்து வரும் வேதிகா திருமணமே வேண்டாம் என முடிவு செய்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.   

PREV
15
திருமணத்துக்கு நோ சொன்ன சிம்பு பட ஹீரோயின்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
நடிகை வேதிகாவின் முதல் படம்

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை வேதிகா. மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த இவரை, ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், தான் இயக்கி நடித்த மதராஸி படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்த வேதிகாவுக்கு இது தன முதல் படமாகவும் அமைந்தது. இந்தப் படத்திற்கு பிறகு, ராகவா லாரன்ஸின் முனி படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

25
அடுத்தடுத்து நடிப்பில் பிஸியான நடிகை வேதிகா

பின்னர் சக்கரகட்டி, காளை, மலை மலை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3, பேட்ட ரேப் ஆகிய படங்களில் நடித்தார். இதில், முனி படத்திற்கு பிறகு அவர் ஹிட் கொடுத்த படம் என்றால் அது பரதேசி தான். தமிழ் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஹீரோயினாக நடித்தார்.

காற்று வாங்கும் மாடர்ன் உடை.. கவர்ச்சியில் தாராளம் காட்டும் வேதிகா - ஹாட் பிக்ஸ்!

35
'பேட்ட ரேப்:

கடைசியாக பிரபு தேவா நடிப்பில் வெளியான 'பேட்ட ரேப்' படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், தமிழில் அவரது மவுசு இன்னும் குறையவில்லை. அதனால், அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரின் கைவசம் கனா என்கிற கன்னட படமும், கஜானா என்கிற தமிழ் படமும் உள்ளது.

45
19 ஆண்டுகளை நிறைவு செய்த வேதிகா:

சினிமாவில் நடிக்க வந்து 19 ஆண்டுகளை வேதிகா ஏற்றிவிட்ட போதிலும்,  இன்னும் முதல் படத்தில் பார்த்த அதே லுக்கிலேயே இருக்கிறார். இதற்கான காரணம குறித்து, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  அவரிடம் கேட்ட போது... இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூலாக பதிலளித்துளளார். 37 வயதாகியும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இது தான் என்னுடைய ஃபிட்னஸின் ரகசியம். 

Actress Vedhika : நீல நிற ஆடையில் எக்சஸ் கவர்ச்சி.. ரசிகர்களை ஏங்க வைத்த வேதிகா - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் இதோ!

55
திருமணமே வேண்டாம் என முடிவெடுத்த வேதிகா

அதே போல் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இருக்க விரும்புகிறேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அழகை பாதுகாத்து கொள்ளவும், ஃபிட்னஸை மெயின்டெயின் செய்யவும் திருமணமே வேண்டாம் என இவர் கூறுவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories